அமெரிக்காவை கணித சூத்திரத்தால் மிரட்டிய ஈரான்: உலக சந்தையில் பரபரப்பு!
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஹார்முஸ் நீர்ச்சந்தியை சுற்றியுள்ள பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் கடல்வழிப் போக்குவரத்தை முடக்கப்போவதாக விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஒரு விசித்திரமான மற்றும் வலிமையான பதிலடி கொடுத்துள்ளார். வழக்கமான அரசியல் அறிக்கைகளுக்குப் பதிலாக, ஒரு 'கணித சூத்திரத்தை' பயன்படுத்தி அவர் விடுத்துள்ள எச்சரிக்கை சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Enjoy the current pump figures. With the so-called 'blockade', Soon you'll be nostalgic for $4–$5 gas.
— محمدباقر قالیباف | MB Ghalibaf (@mb_ghalibaf) April 12, 2026
ΔO_BSOH>0 ⇒ f(f(O))>f(O) pic.twitter.com/rVxlC6vFWG
முற்றுகை
அமெரிக்காவின் கடற்படை முற்றுகை அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானுடன் தொடர்புடைய கடல்வழிப் போக்குவரத்தை தடுக்கும் வகையில் விரிவான கடற்படை முற்றுகையை அமல்படுத்த அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM), இன்று மாலை இந்திய நேரப்படி இரவு 7:30 மணி முதல் இந்த முற்றுகையை அமல்படுத்தத் தொடங்கும் என்று அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தடையை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
பதிலடி
சபாநாயகரின் கணித ரீதியான பதிலடி
பொறியியல் பின்னணி கொண்ட ஈரான் சபாநாயகர் காலிபாஃப், எக்ஸ் (X) தளத்தில் "O_BSOH > 0 f(f(O)) > f(O)" என்ற கணித சூத்திரத்தைப் பகிர்ந்துள்ளார். இதன் பொருள், ஹார்முஸ் நீர்ச்சந்தியில் ஏற்படும் மிகச்சிறிய இடையூறு கூட, உலகப் பொருளாதாரத்தில் எதிர்பாராத அளவிற்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதாகும். ஒரு ஆரம்ப அதிர்ச்சி எண்ணெய் விலையை உயர்த்தினால், அது சந்தையில் பீதி மற்றும் விநியோக சங்கிலி சீர்குலைவை ஏற்படுத்தி, விலையை தாறுமாறாக உயர்த்தும் என்பதை அவர் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
நேரடி எச்சரிக்கை
பெட்ரோல் விலை குறித்த நேரடி எச்சரிக்கை
கணித சூத்திரத்துடன் நில்லாமல், வாஷிங்டனில் உள்ள பெட்ரோல் விலையைச் சுட்டிக்காட்டி அமெரிக்க மக்களை அவர் நேரடியாக எச்சரித்துள்ளார். "தற்போதைய பெட்ரோல் விலையை நன்றாக அனுபவித்துக் கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ள அவர், நிலைமை மோசமடைந்தால் தற்போதைய 4 முதல் 5 டாலர் விலையை நினைத்து அமெரிக்கர்கள் ஏங்கும் காலம் வரும் என்று கூறியுள்ளார். இது அமெரிக்காவின் உள்நாட்டு பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.