Loading...
பிரான்சில் 500 பள்ளிகள் மூடல், 5,000 பேர் கைது: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது ஏன்?
பிரான்ஸ் முழுவதும் சுமார் 500 உயர்நிலைப் பள்ளிகள் திங்கள்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன

பிரான்சில் 500 பள்ளிகள் மூடல், 5,000 பேர் கைது: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது ஏன்?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 05, 2026
06:21 pm

செய்தி முன்னோட்டம்

பிரான்சில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக மாறியதை தொடர்ந்து, அந்நாடு முழுவதும் சுமார் 500 உயர்நிலைப் பள்ளிகள் திங்கள்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் 17 அன்று பாரிஸில் உள்ள ஒரு பள்ளியில் தொடங்கிய இந்த போராட்டம், தற்போது மாண்ட்பெல்லியர், நான்டெஸ் மற்றும் மார்சேய் ஆகிய முக்கிய நகரங்களுக்கும் பரவியுள்ளது. பிரான்சில் உள்ள 3,700 பள்ளிகளில் சுமார் 735 பள்ளிகள் இப்போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் அதிகப்படியான பணிக்கு/வகுப்புகளுக்கு வராமை, வகுப்பறைகளில் மிதமிஞ்சிய மாணவர் எண்ணிக்கை மற்றும் மோசமான உள்கட்டமைப்பு வசதிகளைச் சரிசெய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராடி வருகின்றனர். போராட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரை 24 பள்ளிகள் தீக்கிரையாக்கப்பட்டு அல்லது சூறையாடப்பட்டுள்ளன.

கைது

தீவிரமடைந்த வன்முறை & 5,000 பேர் கைது

போராட்டம் வன்முறையாக மாறியதை தொடர்ந்து, காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தி போராட்டக்காரர்களைக் கலைத்தனர்.

தீவிர இடதுசாரி அமைப்புகள் மாணவர் இயக்கத்திற்குள் புகுந்து வன்முறையைத் தூண்டிவிட்டதாகக் கல்வி அமைச்சர் எட்வார்ட் கெஃப்ராய் தெரிவித்துள்ளார்.

இதுவரை 5,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 85% பேர் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வகுப்பறை வசதிகளை மேம்படுத்தவும் பல்கலைக்கழக சேர்க்கை முறையை வெளிப்படையாக்குவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என கல்வி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

அதேவேளையில், அமைதியான முறையில் போராடும் மாணவர்கள் மீது காவல்துறையினர் அளவுக்கு அதிகமான வன்முறையை பிரயோகிப்பதாகக் கூறி ஆம்னெஸ்டி பிரான்ஸ் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT