Page Loader
4 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்
அந்நாட்டு பொது தேர்தல் 2024 ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

4 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்

எழுதியவர் Sindhuja SM
Oct 21, 2023
04:53 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானில் பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மூன்று முறை பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நாடு திரும்பினார். ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நவாஸ் ஷெரீப், 4 ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்கோளாறுகளுக்காக லண்டனில் சிகிச்சை பெற பாகிஸ்தானை விட்டு வெளியேறினார். அதன் பிறகு அவர் நாடு திரும்பவில்லை. பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளை பாகிஸ்தான் எதிர்கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டு பொது தேர்தல் 2024 ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், நவாஸ் ஷெரீப்பின் மிகப்பெரும் அரசியல் போட்டியாளராக இருந்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது ஊழல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

டக்ஜ்வ்

ஷெரீப்பை வரவேற்க ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருக்கும் அவரது ஆதரவாளர்கள் 

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு, நவாஸ் ஷெரீப் நாடு திரும்பியுள்ளார். "இது நம்பிக்கை மற்றும் கொண்டாட்டத்திற்கான நேரம். அவர் திரும்புவது பாகிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் அதன் மக்களுக்கு நல்லது" என்று ஷெரீப்பின் அரசியல் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ்(PML-N) கட்சியின் மூத்த தலைவர் கவாஜா முஹம்மது ஆசிப் கூறியுள்ளார். கடந்த பல மாதங்களாக துபாயில் வசித்து வந்த ஷெரீப், அங்கிருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு விமானம் மூலம் வருகை தருவார் என்றும், பின்னர் லாகூருக்குச் சென்று, அங்கு அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருக்கும் வரவேற்பு பேரணியில் கலந்து கொள்வார் என்றும் அவரது கட்சி முன்பு தெரிவித்திருந்தது.