அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் முதல் போட்டியில் டொனால்ட் டிரம்ப் வெற்றி
திங்களன்று நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் வாக்கெடுப்பில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அயோவாவின் காக்கஸ்ஸில் வெற்றி பெற்றார். வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிராக போட்டியிடும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்ற அந்தஸ்தை உறுதிப்படுத்தினார். 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய அயோவா மாகாணத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று தடம் பதித்துள்ளார். ஐயோவா மாகாணத்தில் நடந்த வாக்குப்பதிவில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு டிரம்ப் மீண்டும் போட்டி
அமெரிக்காவில் பிரதான அரசியல் கட்சிகள் என்றால் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள்தான். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இந்த ஆண்டு (2024) அவரின் பதவிக்காலம் முடியவுள்ளதால் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இருக்கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில், குடியரசு கட்சி சார்பில், ட்ரம்ப், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நிக்கி ஹேலி, தொழிலதிபா் விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.