Loading...
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு வரவுள்ளதா? ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் உள்ளடக்கிய மாபெரும் ஒப்பந்தம் உருவாகிறது என டொனால்ட் டிரம்ப் பேட்டி
ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் உள்ளடக்கிய மாபெரும் ஒப்பந்தம் உருவாகிறது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு வரவுள்ளதா? ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் உள்ளடக்கிய மாபெரும் ஒப்பந்தம் உருவாகிறது என டொனால்ட் டிரம்ப் பேட்டி

எழுதியவர் Venkatalakshmi V
Nov 06, 2026
08:55 am

செய்தி முன்னோட்டம்

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மாபெரும் ஒப்பந்தம் விரைவில் உருவாகவுள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளைத் தாண்டி ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டத்தையுமே உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் சிறப்புத் தூதுவர் கிரில் டிமிட்ரிவ் உடன் நடைபெற்ற ரகசிய சந்திப்புக்குப் பிறகு டிரம்ப் இந்த முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

பேச்சுவார்த்தை

ட்ரம்பின் முக்கிய அறிவிப்பு & வரவிருக்கும் பேச்சுவார்த்தைகள்

செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறுகையில்,"விரைவில் ஒரு மாபெரும் ஒப்பந்தம் கையெழுத்தாகப் போகிறது. இது உக்கிரேனை மட்டும் சார்ந்தது அல்ல; ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் உள்ளடக்கிய ஒரு பெரிய, அழகான ஒப்பந்தமாக இருக்கும். இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்" என்று குறிப்பிட்டார்.

ரஷ்ய மற்றும் உக்கிரேன் பிரதிநிதிகளுக்கு இடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கூடிய அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் நவம்பர் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் அபுதாபியில் நடைபெறவுள்ள நிலையில், டரம்பின் இந்தப் பேச்சு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கிடையில், உக்கிரேனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு கட்டமைப்பு குறித்து உக்கிரேன், நேட்டோ மற்றும் ஐரோப்பிய கூட்டாளிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் பிரஸ்ஸல்ஸில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தியுள்ளதாக டிரம்பின் தூதர் ஜாரெட் குஷ்னர் தெரிவித்துள்ளார்.

அமைதி முயற்சி

மெலனியா டிரம்பின் அமைதி முயற்சி & வெள்ளை மாளிகை சந்திப்பு

ரஷ்ய-உக்ரைன் மோதலில் மனிதநேய அடிப்படையில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, உக்ரைன் ஒலேஷ்கி நகரில் 6 நாள் தற்காலிகப் போர்நிறுத்தத்தை அமெரிக்க முதற் பெண்மணி மெலனியா டிரம்ப் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நேருக்கு நேர் கலந்துகொண்டனர்.

உக்ரைன் தரப்புப் பிரதிநிதிகள் மெலனியா டிரம்பிற்கு சிறப்புக் கௌரவ விருதும், ரஷ்யத் தூதுவர் கிரில் டிமிட்ரிவ் ஒலேஷ்கி சிறுமி வரைந்த இதய ஓவியத்தையும் பரிசாக வழங்கினர்.

மேலும், மெலனியா டிரம்ப் விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு எழுதிய கடிதங்களையும் இரு தரப்புப் பிரதிநிதிகளிடம் வழங்கினார்.

ADVERTISEMENT

இடைக்காலத் தேர்தல்

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் தாக்கம் & புதிய அரசியல் நிலவரங்கள்

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்து, ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் அமைப்பை கைப்பற்றியுள்ள புதிய சூழலில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

ஜனவரியில் பொறுப்பேற்கவுள்ள ஜனநாயக பெரும்பான்மை உக்கிரேனுக்கான ஆதரவை அதிகரிக்கவும், ரஷ்யா மீதான சில தடைகளைத் தளர்த்துவது குறித்து தீவிரமாக விசாரிக்கவும் வாய்ப்புள்ளது.

எவ்வாறாயினும், வரவிருக்கும் அபுதாபி பேச்சுவார்த்தைகள் மற்றும் டிரம்பின் அமைதி முயற்சிகள் ஐரோப்பாவின் நீண்டகாலப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அரங்கில் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT