Loading...
இந்தியாவின் எழுச்சியைத் தடுக்க பாகிஸ்தானை சீனா பயன்படுத்துகிறது: அமெரிக்க அறிக்கையில் தகவல்
இந்தியாவின் எழுச்சியைத் தடுக்க பாகிஸ்தானை சீனா பயன்படுத்துவதாக அமெரிக்க அறிக்கையில் தகவல்

இந்தியாவின் எழுச்சியைத் தடுக்க பாகிஸ்தானை சீனா பயன்படுத்துகிறது: அமெரிக்க அறிக்கையில் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 21, 2026
06:28 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் வளர்ச்சியை தனக்கு எதிரான ஒரு முக்கிய மூலோபாய சவாலாக சீனா கருதுவதாகவும், இந்தியாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானுடனான கூட்டணி மற்றும் கடல்சார் விரிவாக்கத்தை சீனா பயன்படுத்துவதாகவும் அமெரிக்க நாடாளுமன்ற ஆணையம் தெரிவித்துள்ளது. அமெரிக்க-சீனா பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஆய்வு ஆணையம் வெளியிட்டுள்ள 2026 வருடாந்திர அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன. எல்லையில் ராணுவ அழுத்தம், பொருளாதாரக் கட்டுப்பாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடலில் கடற்படை விரிவாக்கம் ஆகியவற்றின் மூலம் இந்தியாவைக் கட்டுப்படுத்த சீனா முயல்வதாக அறிக்கை எச்சரித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்

ஆபரேஷன் சிந்தூர் மோதலில் பாகிஸ்தானுக்கு சீனா அளித்த ஆதரவு மற்றும் இருமுனைப் போர் அபாயம்

கடந்த 2025 மே மாதம் 26 உயிர்களை பலிவாங்கிய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இவ்வறிக்கை விரிவாக ஆய்வு செய்துள்ளது.

அந்த மோதலின்போது சீனா நேரடியாகப் போரில் இறங்காமலேயே பாகிஸ்தானுக்குத் தொழில்நுட்ப மற்றும் உளவுத்துறை உதவிகளை வழங்கியதை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாகிஸ்தானுடன் சீனா வளர்த்து வரும் இத்தகைய பாதுகாப்புக் கூட்டணி, எதிர்கால மோதல்களின்போது இந்தியாவுக்கு இருமுனைப் போர் அபாயத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.

சீனக் கடற்படை

இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படை ஆக்கிரமிப்பு மற்றும் தென் சீனக் கடல் பாணி பெயர் மாற்றம்

உலகின் அதிக மக்கள் தொகை, மிகப்பெரிய ஜனநாயகம் மற்றும் அணு ஆயுத பலம் கொண்ட இந்தியா, ஆசியாவின் அதிகார சமநிலையைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக உள்ளதாக அறிக்கை கூறுகிறது.

சீனாவின் எரிசக்தி மற்றும் வர்த்தகக் கப்பல்கள் செல்லும் இந்தியப் பெருங்கடல் வழித்தடங்களின் அருகே இந்தியாவின் புவியியல் அமைவிடம் சீனாவுக்குப் பெரும் சவாலாக உள்ளது.

இதனை சமாளிக்க இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படை மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்களின் நடமாட்டத்தை சீனா அதிகரித்துள்ளதோடு, தென் சீனக் கடலைப் போலவே கடலடிப் பகுதிகளுக்கு பெயரிட்டு உரிமை கோர முயற்சிப்பதாகவும் அறிக்கை எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

அமெரிக்க ஆணையத்தின் பரிந்துரை

இந்தியப் பெருங்கடலில் கூட்டு நீர்மூழ்கி கண்காணிப்புக்கு அமெரிக்க ஆணையம் பரிந்துரை

சீனாவின் பிராந்திய ஆதிக்கத்தை எதிர்கொள்ள இந்தியாவுடன் ஆழமான உளவுத்துறை, கடல்சார் மற்றும் உற்பத்தி ஒத்துழைப்பை அமெரிக்கா ஏற்படுத்த வேண்டும் என ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

வழக்கமான ராணுவப் பயிற்சிகளைத் தாண்டி இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படை மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் நகர்வுகளை கூட்டாக கண்காணிக்க அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இந்தியப் படைகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்தியா தனது மூலோபாய சுயாட்சியைப் பாதுகாப்பதால் அமெரிக்காவின் அனைத்து இலக்குகளிலும் முழுமையாக இணையாது எனவும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT