
சீனாவில் குறைந்த விலையில் தயாரிக்கப்படும் அமெரிக்க ஆடம்பர பொருட்கள்; ஊடக அறிக்கை வெளியாகி பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
நடந்து வரும் அமெரிக்க-சீன வர்த்தகப் போரில் திடீர் திருப்பமாக, சீன ஊடகங்கள் முக்கிய உலகளாவிய ஆடம்பர பிராண்டுகள் மற்றும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பிரச்சாரப் பொருட்களை உள்ளடக்கிய சர்ச்சைக்குரிய நடைமுறைகளை அம்பலப்படுத்தியுள்ளன.
சீன செய்தி சேனலான சீனா 24 இன் அறிக்கைகளின்படி, பிர்கின், லூயிஸ் உய்ட்டன், சேனல் மற்றும் எஸ்டீ லாடர் மற்றும் பாபி பிரவுன் போன்ற அழகுசாதனப் பிராண்டுகள் உட்பட பல சிறந்த ஆடம்பர லேபிள்கள் நீண்ட காலமாக சீன உற்பத்தியை நம்பியுள்ளன.
இவை சீனாவில் குறைந்த விலையில் பொருட்களை உற்பத்தி செய்து உலகளவில் அதிக விலைக்கு அமெரிக்காவில் விற்பனை செய்கின்றன.
MAHA
MAHA பொருட்களையும் சீனாவில் உற்பத்தி செய்ததாக தகவல்
அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வெளிப்பாட்டில், ஒரு சீன தொழிற்சாலை 2016 முதல் டிரம்பின் "மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்" (MAGA) கீழான பொருட்களை உற்பத்தி செய்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுளளது.
இந்த தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது, ஏனெனில் டிரம்ப் தனது ஜனாதிபதி காலத்தில் "அமெரிக்க பொருட்களை வாங்குங்கள், அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துங்கள்" என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, சீன இறக்குமதிகளுக்கு வரிகளை விதித்து அமெரிக்காவை தளமாகக் கொண்ட உற்பத்திக்காக பிரச்சாரம் செய்தார்.
இது சமூக ஊடகங்களில் டிரம்ப் மீதான கேலிக்கு வழிவகுத்துள்ளது.
எனினும், சீனா தனது வழக்கமான பிரச்சார உத்தியின் மூலம் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பை சிறுமைப் படுத்தும் முயற்சியாக இதை வெளியிட்டிருக்கும் என டிரம்ப் ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.