
இந்தியா உடனான உறவு மிகவும் முக்கியமானது- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
செய்தி முன்னோட்டம்
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா உடனான உறவு மிகவும் முக்கியமானது எனவும், இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்க உறுதி பூண்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
காலிஸ்தானி இயக்க தலைவரான நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவிற்கு தொடர் இருப்பதற்கான நம்பத் தகுந்த ஆதாரங்கள் உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசி இருந்தார்.
இது இரு நாட்டு உறவுகள் இடையே விரிசலை ஏற்படுத்தியது. மேலும் இரு நாடுகளும் அந்தந்த நாடுகளின் தூதர்களை திரும்ப பெற்றுக் கொண்டன.
மேலும் கனடாவுக்கு விசா வழங்குவதையும், இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2nd card
இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதில் கனடா தீவிரமாக உள்ளது
இந்த நிலையில், கனடாவின் மாண்ட்ரீல் பகுதியில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அதில் அவர், "உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், கனடாவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும், இந்தியா உடனான உறவு மிகவும் முக்கியமானது என நினைக்கிறேன்".
"இந்தியா வளர்ந்து வரும் ஒரு பொருளாதார சக்தியும் முக்கியமான புவிசார் அரசியல் நாடு"
"கடந்த ஆண்டு எங்களுடைய இந்தோ- பசுபிக் பிராந்தியத்திற்கான உத்திகளை முன் வைத்திருந்ததால் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதில் நாங்கள் தீவிரமாக உள்ளோம்" என கூறினார்.