Loading...
ஒரே ஆண்டில் 3,323 இந்தியர்கள் நாடு கடத்தல்! கனடாவின் புதிய விதிகளால் இந்திய மாணவர்களுக்கு சிக்கல்; பின்னணி என்ன?
கனடாவிலிருந்து 3,323 இந்தியர்கள் வெளியேற்றம்

ஒரே ஆண்டில் 3,323 இந்தியர்கள் நாடு கடத்தல்! கனடாவின் புதிய விதிகளால் இந்திய மாணவர்களுக்கு சிக்கல்; பின்னணி என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Aug 08, 2026
08:16 pm

செய்தி முன்னோட்டம்

கனடா அரசு தனது நாட்டின் குடிவரவு விதிகளையும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான கட்டுப்பாடுகளையும் தீவிரப்படுத்தியுள்ளதால், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 3,323 இந்தியர்கள் அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த 2025 ஆம் ஆண்டு முழுவதிலும் 3,779 இந்தியர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் முதல் பாதியிலேயே அந்த எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது. 2021 முதல் 2024 வரையிலான எந்தவொரு முழு ஆண்டையும் விட, 2026ன் ஆறு மாதங்களில் அதிகளவில் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

முதலிடம்

மெக்சிகோவை முந்தி முதலிடம் பிடித்த இந்தியா

கடந்த ஐந்து ஆண்டுகளாக கனடாவிலிருந்து அதிகளவில் நாடு கடத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் மெக்சிகோ முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது மெக்சிகோவை முந்தி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இவ்வாண்டின் முதல் பாதியில் 1,573 மெக்சிகோ நாட்டினர் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்தியர்களின் எண்ணிக்கை இருமடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியிருப்பது, அகதி கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவது மற்றும் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி விசா பெற்றது போன்றக் காரணங்களுக்காக இவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

கூடுதலாக வெளியேற்றப்பட வாய்ப்பு

மேலும் 7,600க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேற்றப்பட வாய்ப்பு

கனடா அரசின் அதிகாரப்பூர்வப் பட்டியலின்படி, நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டியர்களின் காத்திருப்புப் பட்டியலில் 7,669 இந்தியர்கள் இன்னும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வரவிருக்கும் மாதங்களில் நாடு கடத்தப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் நடப்பாண்டில் 1,273 இந்தியர்கள் மட்டுமே வெளியேற்றப்பட்ட நிலையில், கனடாவில் அமெரிக்காவை விட இரண்டரை மடங்குக்கும் மேலாக அதிகமான எண்ணிக்கையில் இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று ஆகும்.

ADVERTISEMENT

மாணவர்கள்

இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் தொடர் சரிவு

கனடாவில் படிப்பதற்கான விசா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டதாலும், வாடகை உயர்வு மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்புகள் குறைந்ததாலும் இந்திய மாணவர்கள் கனடாவிற்கு செல்வது வெகுவாகக் குறைந்துள்ளது.

பிரதமர் மார்க் கார்ட்னி தலைமையில் கனடா அரசு மேற்கொண்ட புதிய கொள்கை மாற்றங்கள் காரணமாக, சர்வதேச மாணவர்களின் சேர்க்கை 60 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது.

2023ல் 51 சதவீதமாக இருந்த இந்திய மாணவர்களின் சேர்க்கைப் பங்கு, தற்போது வெறும் 8.1 சதவீதமாகக் குறைந்து கனடா மீதான ஈர்ப்பு குறைந்துள்ளதைக் காட்டுகிறது.

ADVERTISEMENT