அமெரிக்காவில் அதிகாரிகளுக்கு லஞ்சம், மோசடி செய்ததாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது குற்றசாட்டு
அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC), இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் அவரது குழுமத்தின் தலைவர்களுக்கு எதிராக மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதில் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி, அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிர்வாகிகள் மற்றும் அஸூர் பவர் குளோபல் லிமிடெட் நிர்வாகி சிரில் கபேன்ஸ் ஆகியோர் 25 கோடி டாலர் லஞ்சம் கொடுத்து, அதன் மூலம் அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றி பெரும் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அமெரிக்க FBI மற்றும் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகளை தூண்டியுள்ளன. மேலும் விசாரணைகளை தடுக்கும் முயற்சிகள் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Twitter Post
லஞ்சம் கொடுத்து முதலீடுகளை பெற்று மோசடி செய்ததால், தடைகள் விதிக்கப்பட்டுள்ளன
இந்த புகாரின்படி, அதானி மற்றும் அவரது குழுமம், 2020 முதல் 2024 வரை, இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பல பில்லியன் டாலர் சூரிய ஆற்றல் திட்டங்களைப் பெற லஞ்சம் கொடுத்துள்ளனர். அந்த காலத்தில் சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான சூரிய ஆற்றல் ஒப்பந்தங்களைப் பெற்றதாகவும், அவற்றில் தவறான அறிக்கைகள் மற்றும் வயர் மோசடிகளின் வழியாக அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து பெரும் தொகையை திரட்டியதாகவும் SEC கூறியுள்ளது. அந்தச் செயலின் மூலம், அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மோசடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அமெரிக்க செக்யூரிட்டீஸ் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அதானி மற்றும் அவருடைய குழுவினருக்கு எதிராக, நிரந்தர தடைகள், சிவில் அபராதங்கள் மற்றும் அதிகாரி மற்றும் இயக்குனர் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.