இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலுக்கு, இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாடு தான் காரணம்: அமெரிக்க அதிபர்
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நடந்து வரும் தாக்குதலுக்கு மத்தியில், ஹமாஸ் இந்த தாக்குதலை தொடங்கியதற்கு காரணம் இந்தியாவில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டின்போது எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான முடிவுதான் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். முன்னதாக, அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி ஹமாஸ் நடத்திய முன்னோடியில்லாத தாக்குதல்களில் 1,400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதை அடுத்து, ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் பெரிய எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் போது இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் மூலம், முழு பகுதியையும் இரயில் பாதையின் நெட்வொர்க்குடன் முழுப் பகுதியையும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையும், ஹமாஸ் தீவிரவாத தாக்குதல் நடத்தியதற்கு ஒரு காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
சீனாவின் திட்டத்திற்கு மாற்றாக இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (ஐஎம்இஇசி)
அமெரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிபர் ஜோ பைடன், ஹமாஸ் தாக்குதலுக்கு ஐஎம்இஇசி மூலம் இஸ்ரேலுக்கு கிடைக்கும் பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் ஒட்டுமொத்த பிராந்திய ஒருங்கிணைப்பும்தான் என்றார். எனினும், இந்த கருத்து முழுக்க முழுக்க தனது உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது என்றும் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறினார். ஹமாஸின் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஐஎம்இஇசி பொருளாதார வழித்தடத்தை ஒரு வாரத்திற்குள் பைடென் குறிப்பிடுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சிக்கு மாற்றாக கருதப்படும் இது, இந்தியாவை வளைகுடா பகுதியுடன் இணைக்கும் கிழக்கு காரிடார் மற்றும் வளைகுடா பகுதியை ஐரோப்பாவுடன் இணைக்கும் வடக்கு காரிடார் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.