NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மாஸ்கோவில் மகிழ்ச்சியில்லை என விவாகரத்து கோரிய சிரிய அதிபர் பஷர் அல்-அசாத்தின் மனைவி: அறிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாஸ்கோவில் மகிழ்ச்சியில்லை என விவாகரத்து கோரிய சிரிய அதிபர் பஷர் அல்-அசாத்தின் மனைவி: அறிக்கை
    விவாகரத்து கோரிய சிரிய அதிபர் பஷர் அல்-அசாத்தின் மனைவி

    மாஸ்கோவில் மகிழ்ச்சியில்லை என விவாகரத்து கோரிய சிரிய அதிபர் பஷர் அல்-அசாத்தின் மனைவி: அறிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 23, 2024
    02:19 pm

    செய்தி முன்னோட்டம்

    சிரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் மனைவி அஸ்மா அல்-அசாத், மாஸ்கோவில் தனது வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லாத காரணத்தால் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    சிரிய பெற்றோருக்கு லண்டனில் பிறந்து வளர்ந்த பிரிட்டிஷ்-சிரிய நாட்டவரான அஸ்மா, 2000 இல் சிரியாவுக்குச் சென்று அதே ஆண்டு பஷரை மணந்தார்.

    49 வயதான முன்னாள் முதல் பெண்மணி தனது விவாகரத்து விண்ணப்பத்தை ரஷ்ய நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, லண்டனுக்குத் திரும்புவதற்கான திட்டத்துடன் மாஸ்கோவை விட்டு வெளியேற சிறப்பு அனுமதி கோரியுள்ளார்.

    புகலிட நிலை

    பதவி கவிழ்க்கப்பட்ட பிறகு அசாத் குடும்பம் மாஸ்கோவில் தஞ்சம் அடைந்தது

    ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையிலான கிளர்ச்சியாளர்களால் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர், பஷர் அல்-அசாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த மாத தொடக்கத்தில் மாஸ்கோவில் புகலிடம் வழங்கப்பட்டது.

    இச்சம்பவம் சிரியாவில் அசாத் குடும்பத்தின் ஐந்து தசாப்த கால ஆட்சிக்கு முடிவு கட்டியது.

    அமெரிக்காவால் HTS பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தப்பட்டிருந்தாலும், வாஷிங்டன் சமீபத்தில் அதன் தலைவர் அபு முகமது அல்-ஜூலானிக்கு $10 மில்லியன் பரிசுத்தொகையை நீக்கியது.

    கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

    பஷர் அல்-அசாத் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறார், மாஸ்கோவில் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன

    2000 ஆம் ஆண்டு தனது தந்தை ஹபீஸ் அல் அசாத்துக்குப் பின் 24 வருடங்கள் சிரியாவின் அதிபராக ஆட்சி செய்த பஷர் அல் அசாத், ரஷ்யாவில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தஞ்சம் கோரும் நிலைமையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    அவர் மாஸ்கோவை விட்டு வெளியேறவோ அல்லது அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்கவோ அனுமதிக்கப்படவில்லை.

    270 கிலோ தங்கம், 2 பில்லியன் டாலர்கள் மற்றும் மாஸ்கோவில் உள்ள 18 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட அவரது சொத்துகளையும் ரஷ்ய அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

    புகலிடம் நிலுவை

    மகேர் அல்-அசாத்தின் புகலிடக் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது

    பஷர் அல்-அசாத்தின் சகோதரர் மகேர் அல்-அசாத்துக்கு ரஷ்யாவில் புகலிடம் வழங்கப்படவில்லை.

    அவரது புகலிடக் கோரிக்கை ரஷ்ய அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு வருவதால் அவரும் அவரது குடும்பத்தினரும் தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    சிரியாவில் இருந்து வெளியேறிய பிறகு அசாத் குடும்பத்தின் நிலை தொடர்ந்து மாறி வருவதால் இது வந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாஸ்கோ
    சிரியா
    லண்டன்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மாஸ்கோ

    வாக்னர் கூலிப்படையின் தலைவர் உடலில் கையெறி குண்டுகளின் பாகங்கள்- அதிபர் புதின் தகவல் ரஷ்யா
    ரஷ்ய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்றியது அமெரிக்கா  அமெரிக்கா
    27 டன் நிவாரண பொருட்களை காஸாவிற்கு அனுப்பியது ரஷ்யா ரஷ்யா
    "போர் நிறுத்தம் செய்யப்படும் வரை பிணையக்கைதிகளை விடுவிக்க மாட்டோம்": ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சிரியா

    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள் உலக செய்திகள்
    துருக்கி பூகம்ப சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் துருக்கி
    துருக்கி நிலநடுக்கம் அப்டேட்ஸ்: ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன துருக்கி

    லண்டன்

    ஏர் இந்தியா விமானத்தில் விமான பணியாளர்களை தாக்கிய பயணி ஏர் இந்தியா
    பிரிட்டன் உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை நிறுத்தப்படவில்லை: இந்திய அதிகாரிகள் பதில் இந்தியா
    லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம்  இந்தியா
    இந்து எதிர்ப்பு மற்றும் இந்து வெறுப்பு பிரிட்டிஷ் பள்ளிகளில் அதிகரிக்கிறதா  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025