Loading...
நேபாள ஹிம்லுங் இமாலய பேஸ் கேம்பில் பனிச்சரிவு: 10க்கும் மேற்பட்டோர் மாயம்
நேபாள ஹிம்லுங் இமாலய பேஸ் கேம்பில் பனிச்சரிவு

நேபாள ஹிம்லுங் இமாலய பேஸ் கேம்பில் பனிச்சரிவு: 10க்கும் மேற்பட்டோர் மாயம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 27, 2026
01:30 pm

செய்தி முன்னோட்டம்

மேற்கு நேபாளத்தில் திபெத் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள 'ஹிம்லுங் இமால்' மலைச்சிகரத்தின் பேஸ் கேம்பில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி குறைந்தபட்சம் 10 பேர் மாயமாகியுள்ளனர். 7,126 மீட்டர் உயரமுள்ள ஹிம்லுங் இமால் சிகரம், நேபாளத்தின் மனாங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடத்த வாரமே மோசமான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையிலும், தீவிரப் பனிப்பொழிவுக்கு இடையே சிலர் அப்பகுதியில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. 'இமேஜின் நேபால்' நிறுவனத்தை சேர்ந்த இருவர் மற்றும் 'ஹிமாலயன் ஹாலிடேஸ் நேபால்' நிறுவனத்தைச் சேர்ந்த 8 பேர் என மொத்தம் 10 பேர் பனிச்சரிவில் சிக்கி மாயமாகியுள்ளனர்.

சிக்கல்கள்

மீட்புப் பணிகளில் நிலவும் சிக்கல்கள்

சம்பவம் குறித்த தகவல்களை நேபாள சுற்றுலாத் துறை சேகரித்து வரும் நிலையில், மீட்புப் பணிகளை தொடங்குவதில் பெரும் சவால்கள் நிலவுகின்றன.

இப்பகுதியில் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தக் கூடுதல் சிறப்பு அனுமதிகள் தேவைப்படுவதாலும், தொடர் பனிப்பொழிவு காரணமாகவும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தை அடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தானின் பிராட் பீக் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் புகழ்பெற்ற பிரிட்டன்-நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 பேர் உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய வடு மாறுவதற்குள், நேபாளத்தில் இப்பனிச்சரிவு அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

ADVERTISEMENT