Loading...
ஓடுதளத்தை விட்டு வெளியேறி வாகனங்கள் மீது மோதிய அமேசான் விமானம்; 5 பேர் உயிரிழப்பு
தரை இறங்கும்போது ஓடுதளத்தை விட்டு வெளியேறி விபத்துக்குள்ளான அமேசான் விமானம்

ஓடுதளத்தை விட்டு வெளியேறி வாகனங்கள் மீது மோதிய அமேசான் விமானம்; 5 பேர் உயிரிழப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 07, 2026
07:56 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் பிரைம் ஏர் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று தரை இறங்கும்போது ஓடுதளத்தை விட்டு வெளியேறி விபத்துக்குள்ளானதில், குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர். சான் ஜுவான் நகரில் இருந்து புறப்பட்ட அமேசான் பிரைம் ஏர் 7598 என்ற போயிங் 767 சரக்கு விமானம், மியாமி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தரை இறங்க முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓடுதளத்தை கடந்து கட்டுப்பாட்டை இழந்த விமானம், தரையில் நின்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது பலமாக மோதித் தீப்பற்றி எரிந்தது. இச்சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், 3 பேர் கவலைக்கிடமான நிலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணி

மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தல்

விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் 200-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினரும் 60-க்கும் மேற்பட்ட அவசரகால மீட்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

விமானத்தின் பாகங்கள் மற்றும் வாகனங்களுக்குள் சிக்கியிருந்த விமானிகள் உட்படப் பலரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டெடுத்தனர்.

விபத்தை தொடர்ந்து விமான நிலைய நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் பகுதி அளவாக மீண்டும் தொடங்கப்பட்டன.

விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அமேசான் நிறுவனம், உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தேசியப் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறியத் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT