Page Loader
அமெரிக்காவில் பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மாணவர்கள்.

அமெரிக்காவில் பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

எழுதியவர் Srinath r
Nov 27, 2023
01:35 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் வெர்மான்ட் பல்கலைக்கழகம் அருகே பர்லிங்டன் தேங்க்ஸ் கிவ்விங் விடுமுறை கூடுதல் பங்கேற்றிருந்த, பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தில், இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில், ஒருவர் படுகாயம் அடைந்தார். காவல்துறையினர் துப்பாக்கி சூட்டுக்கு, வெறுப்புணர்ச்சி காரணமாக இருக்கலாம் என தெரிவித்தனர். 20 வயதான மாணவர்கள் மூவரும், ஒரு மாணவரின் உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, கை துப்பாக்கியால் ஒரு வெள்ளையர் அவர்களை சுட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மூன்று பேரும் தாக்கப்பட்டனர். இருவருக்கு அவர்களின் உடற்பகுதியிலும், மற்றொருவர் இடுப்புக்கு கீழ் பகுதியிலும் குண்டடிப்பட்டதாக கூறப்படுகிறது.

2nd card

தாக்குதலுக்கான நோக்கத்தை பரிந்துரைக்க கூடுதல் தகவல்கள் இல்லை- காவல்துறை

காயம் பட்டவர்களில் இருவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள், ஒருவர் சட்டப்பூர்வ குடியேறி ஆவர். அதில் இரண்டு மாணவர்கள், கருப்பு மற்றும் வெள்ளை பாலஸ்தீனிய கெஃபியேயை அணிந்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். பர்லிங்டன் காவல்துறைத் தலைவர் ஜான் முராட் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், காயமடைந்தவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அனுதாபங்களை தெரிவித்ததோடு, தாக்குதலுக்கான நோக்கத்தை பரிந்துரைக்க கூடுதல் தகவல்கள் இல்லை என கூறினார். இத்தாக்குதல் குறித்து, அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு விளக்கப்பட்டு இருப்பதாக, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க-இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சில் தனது அறிக்கையில், துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான நபர் அல்லது நபர்களை கைது செய்வதற்கு அல்லது தண்டனைக்கு வழிவகுக்கும் தகவல்களுக்கு, $10,000 பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

துப்பாக்கி சூடு குறித்து துப்புக்கொடுத்தால்  $10,000 பரிசு