
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி - பேட்டிங் செய்த இலங்கை அணி 209 ரன் எடுத்து ஆல் அவுட்
செய்தி முன்னோட்டம்
13வது உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.
இப்போட்டியில் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்றுள்ளது.
அதன்படி இத்தொடரின் 14வது லீக் ஆட்டம் இன்று(அக்.,16) இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடக்கிறது.
இந்த ஆட்டத்திற்கான டாஸை வென்ற இலங்கை அணி பேட்டிங்'கை தேர்வு செய்தது.
அதன்படி மிகுந்த விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில், இலங்கை அணி 43.3 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியது என்று தெரிகிறது.
இதனால் அடுத்து போட்டியில் பேட்டிங் செய்யவுள்ள ஆஸ்திரேலியா அணிக்கு 210 ரன்கள் இலக்காக அமைந்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
இலக்கு நிர்ணயம்
#JUSTIN || உலகக்கோப்பை கிரிக்கெட், ஆஸ்திரேலிய அணிக்கு 210 ரன்கள் இலக்கு
— Thanthi TV (@ThanthiTV) October 16, 2023
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி,
43.3 ஓவர்களில் 209 ரன்களுக்கு ஆல் அவுட்#SLvsAUS #WorldCup2023 pic.twitter.com/kUNRz3XH7T