Page Loader
முதல் உலகக்கோப்பை போட்டியிலேயே இரண்டு சாதனைகளை முறியடித்த ரச்சின் ரவீந்திரா
முதல் உலகக்கோப்பை போட்டியிலேயே இரண்டு சாதனைகளை முறியடித்த ரச்சின் ரவீந்திரா

முதல் உலகக்கோப்பை போட்டியிலேயே இரண்டு சாதனைகளை முறியடித்த ரச்சின் ரவீந்திரா

எழுதியவர் Sekar Chinnappan
Oct 05, 2023
09:43 pm

செய்தி முன்னோட்டம்

வியாழக்கிழமை (அக்டோபர் 5) அகமதாபாத்தில் நடந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா தனது முதல் சதத்தை பதிவு செய்தார். முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணிக்கு 283 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்த இலக்கை எதிர்கொண்ட நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்கார்களில் ஒருவரான வில் யங் டக்கவுட் ஆகி வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வேயுடன் சேர்ந்து ரவீந்திரா வெற்றி இலக்கை எட்டினார். மேலும் இருவரும் சதமடித்தனர். ரவீந்திராவுக்கு இது முதல் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியாகும். அவர் 96 பந்துகளில் 123* ரன்கள் (11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள்) விளாசினார்.

Rachin Ravindra breaks records in World Cup match

ரச்சின் ரவீந்திரா முறியடித்த சாதனைகள்

23 ஆண்டுகள் மற்றும் 321 நாட்களில் ரச்சின் ரவீந்திரா தனது சதம் மூலம், நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக உலகக்கோப்பையில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன்னர், நாதன் ஆஸ்டலின் 24 ஆண்டுகள் 152 நாட்களில் சதமடித்ததே சாதனையாக இருந்தது. சுவாரஷ்யமாக, நாதன் ஆஸ்டலினும் இதே மைதானத்தில் 1996 உலகக்கோப்பை தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, 82 பந்துகளில் சதத்தை எட்டிய ரச்சின், நியூசிலாந்து அணிக்காக ஒருநாள் உலகக்கோப்பையில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். முன்னதாக, இதே போட்டியில் 83 பந்துகளில் சதத்தை எட்டி கான்வே இந்த சாதனையை செய்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் ரவீந்திரா அவரது சாதனையை முறியடித்தார்.