
பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வீரர் வீராங்கனைகளுக்கும் தலா 7 இலட்சம் ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக தமிழ்நாடு அரசு வழங்கியிருந்தது.
இந்த நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தற்போது ஊக்கத்தொகை வழங்கியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
பேட்மின்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை துளசிமதிக்கு 2 கோடி ரூபாய்,
வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை நித்ய ஸ்ரீ மற்றும் மனிஷா ஆகியோருக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கினார் முதலமைச்சர்.
அதேபோல ஆடவர் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பனுக்கு 1 கோடி ரூபாய் வழங்கினார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!#SunNews | #MKStalin | #Paralympics2024 | @mkstalin | @Udhaystalin pic.twitter.com/dORBqrAiX4
— Sun News (@sunnewstamil) September 25, 2024