
எம்.எஸ் தோனிக்கு 44வது பிறந்தநாள்: 'தல'யின் ஐபிஎல் சாதனைகள் மற்றும் இந்திய கிரிக்கெட் பங்களிப்புகள் ஒரு பார்வை!
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் பரிணாமமான முகமாக திகழும் மகேந்திர சிங் தோனி (எ) எம்.எஸ்.தோனி இன்று (ஜூலை 7) தனது 44வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். கிரிக்கெட் விளையாட்டில், தனது இரண்டு தசாப்த காலப் பயணத்தில், தோனி ஒவ்வொரு ஆட்டத்திலும் தனது முத்திரையை பாதிக்க தவறியதேயில்லை. அவரது பிறந்தநாளான இன்று அவரது சாதனைகள் அடங்கிய கிரிக்கெட் வாழ்க்கை பற்றி ஒரு பார்வை இதோ உங்களுக்காக!
ஐபிஎல்
அசைக்க முடியாத ஐபிஎல் வீரர்
2008-ஆம் ஆண்டு முதல் தொடங்கிய IPL பயணத்தில், தோனி CSK அணியின் முதன்மை தூணாக இருந்து வருகிறார். தொடக்க சீசனில் ரூ.6 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட அவர், அதன் பின்னர் 278 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 5,439 ரன்கள் (சராசரி: 38.30, ஸ்ட்ரைக் ரேட்: 137.45), 25 அரைசதங்கள், 84* என்ற உயர் ஸ்கோர், மேலும் ஒரு விக்கெட் கீப்பராக 158 கேட்ச்கள் மற்றும் 47 ஸ்டம்பிங்குகளைச் செய்துள்ளார். 2024 ஐபிஎல் சீசனில் 220.55 ஸ்ட்ரைக் ரேட்டில் 161 ரன்கள் எடுத்ததன் மூலம், தனது தாக்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்தியுள்ளார்.
IPL வெற்றி
தோனி IPL வரலாற்றில் கேப்டனாக பெற்ற வெற்றிகள்
'தல' தோனி, ஐபிஎல் போட்டிகளில் தனது தலைமை மூலம் பல வெற்றிகளும், அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார். 226 போட்டிகளில் தலைமை 133 வெற்றிகள் 10 இறுதிப்போட்டிகள் 5 ஐபிஎல் பட்டங்கள் (2010, 2011, 2018, 2021, 2023) 2 சாம்பியன்ஸ் லீக் T20 பட்டங்கள் இந்த சாதனைகள் மூலம் IPL வரலாற்றில் தோனி, மிக வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
3 உலக போட்டிகள்
தோனியின் தலைமையில் இந்திய அணி உலக போட்டிகளில் வெற்றி
கேப்டன் கூல் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி 3 உலக போட்டிகளில் வெற்றிவாகை சூடியது. 2007 T20 உலகக் கோப்பை 2011 உலகக் கோப்பை 2013 சாம்பியன்ஸ் டிராபி இத்துடன், 200 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்தார் (110 வெற்றிகள்), 72 T20 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தினார் (41 வெற்றிகள்), மேலும் 60 டெஸ்ட் போட்டிகளில் தலைமை வகித்தார் (27 வெற்றிகள்).
புள்ளிவிவரங்கள்
தோனியின் சர்வதேச புள்ளிவிவரங்கள்
ODI: 350 போட்டிகள், 10,773 ரன்கள், சராசரி 50.57 T20I: 98 போட்டிகள், 1,617 ரன்கள், சராசரி 37.60 டெஸ்ட்: 90 போட்டிகள், 4,876 ரன்கள், சராசரி 38.09 மொத்தமாக, 538 சர்வதேச போட்டிகளில் 17,266 ரன்கள் மற்றும் 829 ஆட்டமிழப்புகள்.
'தல'
'தல' என்ற மரியாதை - அந்த நம்பிக்கையின் அடையாளம்
தோனி இன்று வெறும் ஒரு கிரிக்கெட் வீரர் அல்ல, ஒரு கல்ச்சுரல் ஐகானாக மாறியுள்ளார். அவரது அமைதியான தன்மை, திட்டமிடல் திறன், 'ஹெலிகாப்டர் ஷாட்' எனும் தனித்துவமான பாணி, மற்றும் ஆட்டத்தின் மூலமாக பேசும் பாணி அவரது ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நேற்று வரை ஒரு கேப்டன்... என்றும் ஒரு நிலையான ஆட்ட நாயகன். எம்.எஸ். தோனிக்கு நியூஸ்பைட்ஸ் சார்பாகவும், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் சார்பாகவும் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!