சையத் முஷ்டாக் அலி டிராபி- நாகலாந்தை 73 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு வென்றது
சையத் முஷ்டாக் அலி டிராபி கிரிக்கெட் போட்டியில், நாகாலாந்து அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வென்றது. டேராடூன் நடைபெற்ற குருப் இ போட்டியில், நாகலாந்து அணியும் தமிழ்நாடு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் சேர்த்தது. தமிழக அணி சார்பில் அதிகபட்சமாக விஜய் சங்கர், 24 பந்துகளில் 36 ரன்கள் விலாசினார். விக்கெட்டுகள் ஒரு புறம் சரிந்தாலும், வந்த வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதனால் அணியின் ஸ்கோர் மடமடவென உயர்ந்தது. நாகாலாந்து சார்பில் நாகஹோ சிஷி, ஆர்.எஸ்.ஜெகநாத் சீனிவாஸ், ஷோபீஷ் தல இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
சேசிங்கில் சொதப்பிய நாகலாந்து
கடினமான இலக்கை சேஸ் செய்த நாகலாந்து அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அணியின் கேப்டன் ரோங்சன் ஜொனாதன், ரூபேரோ உள்ளிட்டோர் மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். பின்னர் இறங்கிய ஜெகநாத் சீனிவாஸ் மட்டும் 10 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து சற்று ஆறுதல் தந்தார். இருப்பினும் இந்த ஆட்டம் வெற்றிக்கு கை கொடுக்கவில்லை. இறுதியில் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 123 ரன்கலையே சேர்த்து 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தமிழக அணி சார்பில், ஷாருக்கான், சஞ்சய் யாதவ், குல்தீப் சென் ஆகியோர் தல ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் 6 போட்டியில் மூன்றில் வென்று 14 புள்ளிகள் உடன், பட்டியலில் நான்காம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது.