ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
இந்தியாவில் சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டி விளையடி வரும் இங்கிலாந்து அணி, 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிவிற்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் 2-வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகியோரின் அபார பந்துவீச்சால், அந்த அணி 145 ரன்களில் ஆட்டமிழந்தது. 3-ஆம் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 8 ஓவர்களில், விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. இன்று தொடர்ந்து இந்திய அணி விளையாடவுள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 152 ரன்கள் மட்டுமே தேவை.
மகளிர் ஐபிஎல் 2024: குஜராத் ஜையண்ட்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி
மகளிர் ஐபிஎல் தொடரின் 2வது சீசன், பெங்களூருவில் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜையண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற குஜராத் ஜையண்ட்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்ததது. ஆட்டத்தின் இறுதியில் அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் பெற்றது. பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 18.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து, அபார வெற்றி பெற்றது.
ப்ரோ ஹாக்கி லீக்: அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா
9 அணிகள் இடையிலான 5-வது புரோ ஹாக்கி லீக் தொடரின் 2-வது ரவுண்டு போட்டி புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியும், அயர்லாந்து அணியும் மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் முடிவில், 4-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி, அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஐசிபிஎல் கிரிக்கெட் போட்டி: திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது
தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் இந்தியா சிமெண்ட் புரோ லீக் (ஐசிபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 2-வது சீசனின் சாம்பியன் பட்டத்தை வென்றது திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணி. நேற்று நடைபெற்ற ஐசிபிஎல் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ், காரைக்குடி சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. போட்டியின் இறுதியில், 27 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. சாம்பியன் பட்டத்தினை, திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணிக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரும், தமிழக வீரருமான கே. ஸ்ரீ வாசுதேவதாஸ் வழங்கி கௌரவித்தார்.