ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
செய்தி முன்னோட்டம்
இன்று தென்னாபிரிக்காவில் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நடைபெறவுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் உள்ள பெனோனி நகரில் இன்று மதியம் நடைபெறவுள்ள இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன.
இந்தியா அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அதனால் தற்போது கோப்பையை மீண்டும் தனதாக்க வேண்டும் என்ற முனைப்புடன் அணி களமிறங்குகிறது.
அதே நேரத்தில், ஜூனியர் உலக கோப்பை போட்டியில், ஆஸ்திரேலியா அணியுடன், இந்தியா மூன்று முறை மோதியுள்ளது. மூன்று முறையும் இந்தியாவே வெற்றி பெற்றது.
சதுரங்கம்
வெய்சன்ஹாஸ் செஸ் போட்டி: மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இந்திய வீரர் குகேஷ்
ஜெர்மனியின் வாங்கல்ஸ் நகரில் நடைபெற்று வரும் வெய்சன்ஹாஸ் செஸ் போட்டியின் தொடக்க நாளில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், அர்மேனியாவின் லெவோன் அரோனியன் மற்றும் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென் ஆகியோரை தோற்கடித்தார்.
எனினும் பிரான்சின் அலிரெசா ஃபிரோசாவிடம் தோல்வியடைந்தார்.
முதல்நாள் போட்டியின் இறுதியில் டி.குகேஷ் தற்போது வரி 3 புள்ளிகளுடன், 2-வது இடத்தில் உள்ளார்.
3.5 புள்ளிகளுடன் ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் முதலிடத்தில் உள்ளார்.
கிரிக்கெட்
விராட் கோலி குடும்பத்தாரிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய டி வில்லியர்ஸ்
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ், விராட் கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் தங்கள் இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகியுள்ளனர் என்று சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்த நிலையில், அதை அடுத்த நாளே தவறான தகவல் என தெரிவித்தார்.
இந்த நிலையில் உறுதிப்படுத்தப்படாத தகவலை தெரிவித்ததற்காக விராட் கோலி குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது யூடியூப் சேனலின் நேரலையில் பேசிய ஏபி டி வில்லியர்ஸ், விராட் கோலி பற்றி உறுதிப்படுத்தப்படாத தகவலை தெரிவித்ததற்காக தான் மன்னிப்பு கேட்பதாகவும், உறுதிப்படுத்தப்படாத தகவலை தான் பகிர்ந்து கொண்டது சரியல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
ஹாக்கி
புரோ ஹாக்கி லீக் தொடர்: ஸ்பெயினை வீழ்த்திய இந்திய அணி
தற்போது நடைபெற்று வரும் சர்வதேச ஹாக்கி சம்மேளத்தின் புரோ ஹாக்கி லீக் தொடரின் லீக் ஆட்டம், புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - ஸ்பெயின் அணிகள் மோதின.
இதில், இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை தோற்கடித்து வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து, இன்று இந்தியஅணி தனது 2-வது ஆட்டத்தில் நெதர்லாந்துடன் மோதுகிறது.
இந்த போட்டி, இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.