NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 
    இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 29, 2024
    08:44 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, கடைசி ஆட்டத்தை வரும் மார்ச் 7-ஆம் தேதி விளையாட உள்ளது.

    எனினும், அதனை எதிர்கொள்ளவிருக்கும் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே காயத்திலிருந்து மீண்டு வந்த ராகுல், தொடரின் பயிற்சியின் போது தசைப்பகுதியில் மீண்டும் வலி ஏற்பட்டுள்ளது.

    அதனால், சிகிச்சை எடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதனால், 5வது டெஸ்ட் போட்டியில், கே.எல்.ராகுல் விளையாடுவது சந்தேகமே!

    அதே நேரத்தில், இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டதால், கடைசி ஆட்டத்தில் மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    அதனால் புது போட்டியாளர்கள் களமிறங்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    பிசிசிஐ

    பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் விடுவிப்பு

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டு ஒப்பந்தத்திலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    அதேநேரத்தில், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணிக்காக ஒப்பந்தமிட்டுள்ளார்.

    ஆண்டுதோறும் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தம் சார்ந்த விவரங்களை பிசிசிஐ புதுப்பிக்கும்.

    அந்த வகையில் 2023-2024 சீசனுக்கான வீரர்களின் ஒப்பந்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

    அதில் உள்ளூர் போட்டிகளில் விளையாட மறுத்து வந்த இஷான் கிஷனின் பெயர் இடம்பெறவில்லை.

    முன்னதாக இந்திய அணியில் அங்கம் வகிக்கும் வீரர்கள், அணிக்காக விளையாடாத சமயங்களில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஐசிசி 

    ஐசிசி தரவரிசை பட்டியலில் ஜெய்ஸ்வால் முன்னேற்றம்

    நேற்று வெளியான ஐசிசி தரவரிசை பட்டியலில், அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான 3 இடங்கள் முன்னேறியுள்ளார்.

    தற்போது அவர் 12வது இடத்தில உள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டித்தொடர் தொடங்கும் முன் அவர் தரவரிசையில் 69-வது இடத்தில இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதன் பின்னர், டெஸ்ட் போட்டி தொடரில் அவர் வெளிப்படுத்திய அசாதாரண ஆட்டத்தால் தற்போது 12 வது இடத்தை பிடித்துள்ளார்.

    குறிப்பாக, தொடரின் 2வது மற்றும் 3வது போட்டியின் போது ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

    அதன்பின்னர் 4 வது போட்டித்தொடரின் இரு இன்னிங்ஸிலும் கூட்டாக 110 ரன்கள் பெற்றதே ஜெய்ஸ்வாலின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம்

    டென்னிஸ்

    டென்னிஸ் சாம்பியன்ஷிப்: போப்பண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

    துபாயில் நடைபெற்று வரும், டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது.

    இந்த ஜோடி முதல் சுற்றில், துனிசியாவின் ஸ்கந்தர் மன்சூரி, பாகிஸ்தானின் அய்சாம் உல் ஹக் குரேஷி ஜோடியை எதிர்கொண்டது.

    போட்டியின் துவக்கம் முதலே அபாரமாக ஆடிய போபண்ணா- எப்டன் ஜோடி, 7-6(4) 7-6(5) என்ற செட் கணக்கில் போட்டியை வென்று, கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    காலிறுதி போட்டியில், இந்த ஜோடி, உருகுவேயின் ஏரியல் பெஹர், செக்குடியரசின் ஆடம் பாவ்லாசெக் ஜோடியை எதிர்கொள்ளும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விளையாட்டு வீரர்கள்
    விளையாட்டு

    சமீபத்திய

    ஹார்வர்டு பல்கலைக்கழத்திற்கான 100 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவு அமெரிக்கா
    பல ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக நிகர லாபத்தை பதிவு செய்தது பிஎஸ்என்எல் பிஎஸ்என்எல்
    ஊழலால் பணிநீக்கம் செய்யப்பட்டும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது; மத்திய அரசு அதிரடி ஓய்வூதியம்
    மின்சார வாகன சந்தையில் நுழைந்தது கேடிஎம்; எலக்ட்ரிக் டியூக் மாடல் அறிமுகம் கேடிஎம்

    விளையாட்டு வீரர்கள்

    மிக்ஜாம் புயலால் 200 டேபிள் டென்னிஸ் வீரர்கள் விஜயவாடாவில் தவிப்பு டேபிள் டென்னிஸ்
    Sports Round Up: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்
    ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்கள் நடுநிலை போட்டியாளர்களாக ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி ஒலிம்பிக்
    மகேந்திர சிங் தோனி பயன்படுத்திய எண்.7-க்கு விடை கொடுத்த பிசிசிஐ கிரிக்கெட்

    விளையாட்டு

    கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2024: சின்னம் வெளியிடப்பட்டது கேலோ இந்தியா
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்கள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு வீரர்கள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025