SA vs BAN: இன்றைய ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்தியாவில் நடந்து வரும் 13வது ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின், 23வது லீக் போட்டியில் தென்னாபிரிக்காவும் வங்கதேச அணிகளும் மோதுகின்றன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற, தென்னாபிரிக்கா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த உலகக் கோப்பையை பொறுத்தவரையில், விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் வென்று தென்னாபிரிக்க அணி புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இன்று வெற்றி பெறும் பட்சத்தில், புள்ளி பட்டியலில் தென்னாபிரிக்க இரண்டாம் இடத்திற்கு முன்னேறும். அதே சமயம் வங்கதேச அணி, நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது.
போட்டியில் விளையாடும் 11 வீரர்களின் விபரங்கள்
உலகக் கோப்பை போட்டிகளை பொறுத்தவரையில் இவரு அணிகளும் இதுவரை நான்கு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.அதில் இரு அணிகளும் தலா இருமுறை வென்றுள்ளன. இன்றைய போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் விவரம்: தென்னாபிரிக்கா- குயின்டன் டி காக்(w), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம்(c), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லிசாட் வில்லியம்ஸ். வங்கதேசம்- தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன்(c), மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹீம்(w), மஹ்முதுல்லா, நசும் அகமது, முஸ்தபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத்.