மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 4,000 ரன்கள் அடித்த இந்தியர்; ஸ்மிருதி மந்தனா சாதனை
செய்தி முன்னோட்டம்
வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) அன்று ராஜ்கோட்டில் அயர்லாந்திற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்மிருதி மந்தனா ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டினார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பெண்களுக்கான ஒருநாள் போட்டிகளில் 4,000 ரன்களை அதிவேகமாக எட்டிய இந்திய வீரர் ஆனார்.
இந்த சாதனையை வெறும் 95 இன்னிங்ஸ்களில் செய்தார். மிதாலி ராஜுக்குப் பிறகு, மகளிர் ஒருநாள் போட்டிகளில் இந்த மைல்கல்லைத் தாண்டிய இரண்டாவது இந்திய வீராங்கனை ஆவார்.
ஹர்மன்பிரீத் கவுர் இல்லாத நிலையில் அணிக்கு கேப்டனாக இருந்த மந்தனா, 2011ல் 112 இன்னிங்ஸ்களை எடுத்த தனது முன்னோடியை விட 17 இன்னிங்ஸ்களில் மைல்கல்லை எட்டியதன் மூலம் மிதாலியின் சாதனையை முறியடித்தார்.
மூன்றாவது இடம்
சர்வதேச அளவில் மூன்றாவது இடம்
மகளிர் இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனைகளில் அதிவேகமாக 4,000 ஒருநாள் ரன்களை எடுத்தவர் என்ற சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா, சர்வதேச அளவில் இந்த சாதனையை செய்த மூன்றாவது வீராங்கனை ஆவார்.
உலகளவில், ஒருநாள் கிரிக்கெட்டில் 4,000 ரன்களை அதிவேகமாக எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஆஸ்திரேலியாவின் பெலின்டா கிளர்க்(86 இன்னிங்ஸ்) மற்றும் மெக் லானிங் (89 இன்னிங்ஸ்) உள்ளனர்.
இதற்கிடையே, இந்த போட்டியில் மகளிர் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக பவர்பிளே ஸ்கோரை அடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.