ஆசிய விளையாட்டு போட்டி 2026: மகளிர் கூட்டு வில்வித்தையில் தங்கம் வென்று இந்திய அணி சாதனை
செய்தி முன்னோட்டம்
ஜப்பான் நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டி 2026-இல், மகளிர் கூட்டு வில்வித்தை (Women's Team Compound Archery) பிரிவில் இந்திய அணி அபார திறமையை வெளிப்படுத்தித் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி உலக சாதனையை சமன் செய்துள்ளது. ஜோதி சுரேகா வென்னம், சிகிலா தனிபார்த்தி மற்றும் பிரிதிகா பிரதீப் ஆகியோரைக் கொண்ட இந்திய அணி, அரையிறுதிப் போட்டியில் வலுவான தென்கொரிய அணியை எதிர்கொண்டது. ஆரம்பத்தில் 59-59 எனச் சமநிலையில் இருந்த ஆட்டத்தில், இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனைகள் 59-56 என முன்னிலை பெற்றனர். இறுதியில் பரபரப்பாக நடைபெற்ற இப் போட்டியில் 234-233 என்ற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Bullseye for Gold! 🎯🥇
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) September 30, 2026
Heartiest congratulations to Jyothi Surekha Vennam, Prithika Pradeep, and Taniparthi Chikitha on winning Gold in the Women’s Compound Team event at #AsianGames2026. The trio also equalled the World Record in a masterclass of precision and skill!… pic.twitter.com/ixckk5emdJ
உலக சாதனை
சீனாவுக்கு எதிரான இறுதிப்போட்டி மற்றும் உலக சாதனை
இறுதிப்போட்டியில் சீனாவுக்கு எதிராக களமிறங்கிய இந்திய வீராங்கனைகள் ஆரம்பம் முதலே துல்லியமான இலக்குகளை நோக்கி அம்புகளை எய்தனர்.
முதல் சுற்று: 60-58 என இந்தியா முன்னிலை பெற்றது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்று: தொடர்ச்சியாக '10' புள்ளிகளைக் குவித்து 178-176 என்ற கணக்கில் முன்னிலையைத் தக்கவைத்தது.
இறுதிச் சுற்று: கடைசிச் சுற்றில் தொடர்ச்சியாக 6 முறை '10' புள்ளிகளை எய்து 234 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியதுடன், உலக சாதனையைச் சமன் செய்து தங்கத்தின் பெருமையை தக்கவைத்துக்கொண்டது.
பின்னணி
வீராங்கனைகளின் பின்னணி
இந்திய அணியின் அனுபவமிக்க வீராங்கனையான ஜோதி சுரேகா வென்னம், 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர்.
அவருடன் இணைந்து விளையாடிய இளம் வீராங்கனைகளான சிகிகிதா (2025 உலக இளையோர் சாம்பியன்) மற்றும் பிரிதிகா ஆகியோர் தங்களுடைய துல்லியமான திறமையால் இந்தியாவிற்கு இப் பெருமையைத் தேடித்தந்துள்ளனர்.