
இந்தியா மனதுவைத்தால்தான் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு; எப்படி தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 31) நடைபெற்ற லீக் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை இன்னும் தக்கவைத்துள்ளது.
பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற, அந்த அணி வீரர்கள் சிறப்பாக செயல்படுவதோடு, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானின் உதவி அவர்களுக்கு தேவைப்படுகிறது.
பாகிஸ்தானுக்கான அரையிறுதி வாய்ப்புகள் குறித்து இதில் முழுமையாக பார்க்கலாம். பாகிஸ்தான் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 4 தோல்விகள் மற்றும் 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆப்கானிஸ்தானை பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மேலும், இன்னும் எஞ்சியுள்ள 2 போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துடன் மோத உள்ள நிலையில், அதில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Pakistan need India Afghanistan help to secure Semi final spot
பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்புக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானின் உதவி தேவை
இன்னும் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும், 10 புள்ளிகளுடன் போட்டியை நிறைவு செய்யும் நிலையில், அரையிறுதிக்கு முன்னேற மற்ற அணிகளின் உதவி தேவைப்படுகிறது.
அதன்படி, வியாழக்கிழமை இலங்கையை எதிர்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றால், இலங்கை அரையிறுதி வாய்ப்பை முழுமையாக இழந்துவிடும்.
இதனால், இந்த போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என பாகிஸ்தான் விரும்புகிறது. ஆப்கானிஸ்தானுக்கு இன்னும் மூன்று போட்டிகளில் மீதமுள்ள நிலையில், அந்த அணி மூன்றிலும் வென்றால், பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு முடிவுக்கு வந்துவிடும்.
அதே நேரம், ஆப்கானிஸ்தான் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் முன்னிலை பெறும். ஆப்கானிஸ்தான் இரண்டு வெற்றி பெற்று 10 புள்ளிகள் பெற்றால், நிகர ரன்-ரேட் அடிப்படையில் வாய்ப்புகள் கிடைக்கும்.
Pakistan still need support from other teams
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் உதவி மட்டும் போதுமா?
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல, குறிப்பாக புள்ளிகள் அட்டவணையில் 2, 3 & 4 இடங்களில் உள்ள அணிகளிடமிருந்தும் பாகிஸ்தான் அணிக்கு கூடுதல் உதவி தேவை.
அரையிறுதிக்கு முன்னேற தென்னாப்பிரிக்காவுக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை. அதே சமயம் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா எந்த தொந்தரவும் இல்லாமல் அரையிறுதிக்கு முன்னேற இன்னும் இரண்டு வெற்றிகள் தேவை.
இந்த அணிகளில், பாகிஸ்தான் நியூசிலாந்துடன் விளையாட உள்ளது. அந்த போட்டியில் எந்தவிலை கொடுத்தாவது பாகிஸ்தான் வெல்ல வேண்டும்.
மேலும், தென்னாப்பிரிக்காவுடனும் இலங்கையுடனும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி தோல்வி அடைய வேண்டும். இவ்வாறு பல கட்ட சிக்கலில் பாகிஸ்தான் இருந்தாலும், எப்படியாவது அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.