
ஒருநாள் போட்டிகளில் 500 வெற்றிகள் : இந்தியா, ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்தது பாகிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 500 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்றாவது அணி என்ற சாதனை படைத்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த சாதனையை செய்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் 5 ஒருநாள் போட்டிகளில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 288 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது பேட்டிங் செய்த பாகிஸ்தான் 48.3 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
114 பந்துகளில் 117 ரன்கள் எடுத்த ஃபகார் ஜமான் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
pakistan joins india australia in elite list
ஒருநாள் போட்டியில் 500 வெற்றிகளை பெற்ற அணிகள்
1973 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய பாகிஸ்தான், இப்போது ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவைத் தொடர்ந்து 500 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்றாவது அணியாக மாறியுள்ளது.
இந்த மைல்கல்லை பாகிஸ்தான் 949 போட்டிகளில் எட்டியுள்ளது.
இதில் இலங்கைக்கு எதிராக 92, இந்தியாவுக்கு எதிராக 73, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 63, நியூசிலாந்துக்கு எதிராக 57, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 34, இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக தலா 32 வெற்றிகளை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய அணி 978 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 594 போட்டிகளில் வென்று, அதிக வெற்றி பெற்ற அணியாக உள்ளது.
1000 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஒரே அணியான இந்திய கிரிக்கெட் அணி 539 வெற்றிகளை பெற்றுள்ளது.