ஒரு நாள் உலகக் கோப்பை NZ vs AFG- டாஸ் வென்று பந்து வீசுகிறது ஆப்கானிஸ்தான்
இந்தியாவில் நடைபெற்று வரும் 13 வது உலக கோப்பை தொடரில், இன்றைய போட்டியில் நியூசிலாந்தும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன. சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீசத் தீர்மானித்துள்ளது. நியூசிலாந்து அணி முறையே இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் என அடுத்தடுத்து போட்டிகளில் வென்று வலுவாக உள்ளது. அதே சமயம் ஆப்கானிஸ்தான் அணி கடந்த போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை உலகக்கோப்பைகளில் இவ்விரு அணிகளும் இருமுறை மோதியுள்ளன. அதில் இரண்டிலும் நி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிளேயிங் லெவன்
கடந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான அணி, இந்த போட்டியில் அதே வீரர்களுடன் களமிறங்குகிறது. அதேசமயம் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கடந்த போட்டியில் ஏற்பட்ட காயத்தால் இன்று அவர் போட்டியில் பங்கேற்கவில்லை. இரு அணிகளிலும் விளையாடும் 11 வீரர்கள் பின்வருமாறு. நியூசிலாந்து- டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம்(w/c), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட். ஆப்கானிஸ்தான்- ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(சி), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ராம் அலிகில்(வ), முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி