Page Loader
NZ vs PAK: அதிரடி காட்டிய நியூசிலாந்து.. பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் இலக்கு
அதிரடி காட்டிய நியூசிலாந்து.. பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் இலக்கு

NZ vs PAK: அதிரடி காட்டிய நியூசிலாந்து.. பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் இலக்கு

எழுதியவர் Prasanna Venkatesh
Nov 04, 2023
03:01 pm

செய்தி முன்னோட்டம்

ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் 35வது போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இவ்விறு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு இந்தப் போட்டி மிக முக்கியமான ஒன்று. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு அதிகரிக்கும். இன்றைய போட்டிக்கான டாஸெ வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியின் பேட்டர்கள் அனைவருமே நிதானமான ஆட்டத்தைக் கடைப்பிடித்து அணியின் ரன் குவிப்பிற்கு உதவினர். தொடக்க ஆட்டக்காரரான டெவான் கான்வே தன்னுடைய பங்கிறது 35 ரன்களைக் குவிக்க, இந்தத் தொடரில் சிறப்பாக ஆடி வரும் ரச்சின் ரவீந்திரா சதம் கடந்து அசத்தினார்.

ஒருநாள் உலகக்கோப்பை

கேன் வில்லியம்சன் சிறப்பான ஆட்டம்: 

காயம் காரணமாக பல மாதங்களாக அணியில் இல்லாத கேன் வில்லியம்சன், பல்வேறு தடைகளுக்குப் பிறகு இந்தப் போட்டியில் கேப்டனாகக் களமிறங்கினார். கடைசி மூன்று போட்டிகளை நியூசிலாந்து தோற்றிருந்த நிலையில், முக்கியமான இந்தப் போட்டியில் நிதானமாக விளையாடி 95 ரன்களைக் குவித்தார். கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய பேட்ஸ்மேன் அதிரடியாக 150 ஸ்ட்ரைக் ரேட்டிற்கு மேல் ஆடி தங்களுடைய பங்களிப்பாக குறிப்பிட்ட ரன்களை நியூசிலாந்தின் கணக்கில் சேர்க்கத் தவறவில்லை. அனைத்து பேட்டர்களும் தங்களது பங்களிப்பை அளித்ததன் பலனாக, இன்னிங்ஸ் முடிவில் 50 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்களைக் குவித்தது நியூசிலாந்து. பாகிஸ்தான் அணியின் சார்பில் முகமது வாசிம் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் இலக்காக நிர்ணியிக்கப்பட்டது.