Page Loader
2026 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நடத்த உள்ளது நியூ ஜெர்சி 

2026 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நடத்த உள்ளது நியூ ஜெர்சி 

எழுதியவர் Sindhuja SM
Feb 05, 2024
09:31 am

செய்தி முன்னோட்டம்

2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நியூ ஜெர்சியில் நடைபெறும் என்று உலக கால்பந்தாட்டத்தின் நிர்வாகக் குழுவான FIFA ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. மேலும் உலகளாவிய கால்பந்து கண்காட்சிக்கான முழு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. 48 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை, ஜூலை 19-ம் தேதி கிழக்கு ரதர்ஃபோர்டில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் நிறைவடையும். இந்த உலக கோப்பை போட்டியை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த உலக கோப்பை போட்டிகளில் 13 ஆட்டங்களை கனடாவும், 13 ஆட்டங்களை மெக்சிகோவும் நடத்த உள்ளன.

உலக கோப்பை 

மெக்சிகோ மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை நடத்த உள்ளது 

மீதமுள்ள போட்டிகள் அமெரிக்காவில் உள்ள 11 நகரங்களில் நடைபெறும். டொராண்டோ, மெக்ஸிகோ சிட்டி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகியவை அந்தந்த தேசிய அணிகளின் தொடக்க ஆட்டங்களை நடத்தும். ஜூன் 11 ஆம் தேதி மெக்சிகோ சிட்டியின் எஸ்டாடியோ அஸ்டெகா போட்டியின் தொடக்க ஆட்டத்தை நடத்துகிறது. அப்போது மெக்சிகோ மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை நடத்தும் முதல் நாடாக மாறும். தொடக்க நாளில் குவாடலஜாராவில் ஒரு போட்டியும் இடம்பெறும். மெக்சிகோ 1970 மற்றும் 1986 இல் உலகக் கோப்பையை நடத்தியது. இரண்டு உலக கோப்பையின் இறுதிப் போட்டிகளும் எஸ்டாடியோ அஸ்டெகாவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.