
எம்எஸ் தோனியின் 7ஆம் எண் ஜெர்சியை அணிந்துள்ள நெதர்லாந்து கிரிக்கெட் வீரர் விக்ரம்ஜித் சிங்
செய்தி முன்னோட்டம்
நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விக்ரம்ஜித் சிங், ஜெர்சி எண் 7 அணிந்ததற்கான காரணத்தை முதல்முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.
விக்ரம்ஜித் சமீபத்தில் ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில், ஓமனுக்கு எதிராக தனது முதல் சர்வதேச சதத்தை அடித்தார். இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் சதமடித்த இளம் டச்சு வீரர் என்ற பெருமையை விக்ரம்ஜித் சிங் பெற்றார்.
இந்த சாதனைக்கு சில நாட்களுக்குப் பிறகு, விக்ரம்ஜித், ஐசிசியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சுருக்கமான நேர்காணலில் இடம்பெற்றார்.
அதில், அவர் தனது நாட்டிற்காக 7வது எண் கொண்ட ஜெர்சியை அணிந்ததன் பின்னணியில் உள்ள கதையை வெளிப்படுத்தினார்.
vikramjit singh wears no 7 jersey
10ஆம் எண் ஜெர்சியை விரும்பிய விக்ரம்ஜித் சிங்
விக்ரம்ஜித் சிங், 7ஆம் எண் கொண்ட ஜெர்சியை அணிவதற்கும், எம்எஸ் தோனிக்கும் தொடர்பு உண்டா என பலர் கேட்டதற்கான பதிலை விக்ரம்ஜித் சிங் ஐசிசி வீடியோவில் வெளிப்படுத்தி உள்ளார்.
விக்ரம்ஜித் சிங்கின் கூற்றுப்படி, அவர் நெதர்லாந்திற்காக தான் அறிமுகமானபோது, 10ஆம் இலக்க ஜெர்சியை அணிய விரும்பினார். ஆனால் அதை ஏற்கனவே அணியின் மூத்த மற்றும் வேகப்பந்து வீச்சாளரான டிம் வான் டெர் குக் வைத்திருந்தார்.
இதனால் தனது அடுத்த விருப்பமான 7ஆம் எண் ஜெர்சியை பெற்றதாகவும், இதன் பின்னணியில் வேறு எந்த விஷயமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
எனினும், இது தோனி ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்றதோடு, எண் 7 ஜெர்சி எப்போதும் தோனிக்கான முத்திரையாக மட்டுமே இருக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.