Page Loader
யுவராஜ் சிங், ரோஹித் ஷர்மாவின் சாதனைகளை முறியடித்த நேபாள கிரிக்கெட் வீரர்கள்
யுவராஜ் சிங், ரோஹித் ஷர்மாவின் சாதனைகளை முறியடித்த நேபாள கிரிக்கெட் வீரர்கள்

யுவராஜ் சிங், ரோஹித் ஷர்மாவின் சாதனைகளை முறியடித்த நேபாள கிரிக்கெட் வீரர்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 27, 2023
11:39 am

செய்தி முன்னோட்டம்

புதன்கிழமை (செப்டம்பர் 27) நடந்த மங்கோலியாவிற்கு எதிரான ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேபாள ஆடவர் கிரிக்கெட் அணி பல சாதனைகளை முறியடித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாளம், 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்களை எடுத்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 300 ரன்களைத் தாண்டிய முதல் அணியாக மாறியது. நேபாள வீரர் தீபேந்திர சிங் ஐரி, யுவராஜ் சிங்கின் நீண்ட கால டி20 அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை முறியடித்தார். யுவராஜ் சிங் இங்கிலாந்துக்கு எதிரான 2007 உலகக் கோப்பையின் போது 12 பந்துகளில் அரைசதம் எட்டிய நிலையில், தீபேந்திர சிங் வெறும் ஒன்பது பந்துகளில் அரைசதம் எட்டி சாதனை படைத்துள்ளார்.

Nepal cricket team breaks record in t20i

டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம்

இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர பேட்டர் டேவிட் மில்லர் ஆகியோரைக் கடந்து டி20யில் அதிவேக சதத்தை 34 பந்துகளில் எட்டி நேபாள வீரர் குஷால் மல்லா சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்த மங்கோலியா 41 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இதன் மூலம், நேபாளம் 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையும் படைத்துள்ளது. இதற்கிடையே, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நேரடியாக காலிறுதி போட்டியில் விளையாட உள்ளது. இந்த அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் தலைமைதாங்குகிறார்.