ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் எம்.எஸ். தோனி: IPL 2027 முதல் CSK அணியின் 'மென்டர்' ஆக புதிய அவதாரம்
செய்தி முன்னோட்டம்
கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, தனது புகழ்பெற்ற ஐபிஎல் விளையாட்டு வாழ்க்கைக்கு விடைகொடுத்துள்ளார். அதே சமயம், ஐபிஎல் 2027 சீசன் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மென்டர்- ஆக புதிய அத்தியாயத்தைத் தொடங்குவார் என அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛
— Chennai Super Kings (@ChennaiIPL) November 17, 2026
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever 💛
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS… pic.twitter.com/TA5Qfrq4dI
என். ஸ்ரீனிவாசன்
"தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை"
தோனியின் ஓய்வு மற்றும் புதிய பொறுப்பு குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதாவது, "தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக வெற்றிகள், பின்னடைவுகள் என அனைத்திலும் நாங்கள் ஒன்றாகப் பயணித்துள்ளோம். 2008-ல் தோனி சிஎஸ்கே அணியில் இருக்க வேண்டும் என நான் பிடிவாதமாக இருந்தேன். நான் எடுத்த மிகச்சிறந்த முடிவு அதுதான்".
"அவரது சாதனைகளுக்காக மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதற்காகவும் அதைச் சொல்கிறேன். தோனி எப்போதும் எங்கள் அடையாளத்தின் ஒரு பகுதியாக இருப்பார்; இது எப்போதும் அவரது வீடாக இருக்கும்."
காசி விஸ்வநாதன்
"நமது வீரர்களை வழிநடத்துவார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது"
சிஎஸ்கே உரிமையாளர் ரூபா குருநாத் கூறுகையில்,"தோனி போன்ற ஒரு வீரர் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே தோன்றுவார். அணி மாற்றத்தைச் சந்தித்து வரும் இந்தக் காலகட்டத்தில், இளம் வீரர்களை வழிநடத்தவும் அடுத்த தலைமுறை சிஎஸ்கே அணியை உருவாக்கவும் மென்டராக அவரது அனுபவம் விலைமதிப்பற்றது" எனத் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் பேசுகையில், "களத்தில் மஞ்சள் உடையில் தோனியைப் பார்ப்பதை நாம் தவறவிடுவோம் என்றாலும், அவர் தொடர்ந்து நமது வீரர்களை வழிநடத்துவார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் சென்னையை தத்தெடுத்தார்; சென்னையும் அவரை தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டது" என்றார்.
தோனியின் சகாப்தம்
ஐபிஎல் வரலாற்றில் அழிக்க முடியாத 'தல' தோனியின் சகாப்தம்
ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் டி20 வரலாற்றில் தோனி படைத்த சாதனைகள் என்றும் நிலைத்திருக்கும்.
சிஎஸ்கே அணியை 5 ஐபிஎல் கோப்பைகளுக்கும் (கூட்டுச் சாதனை), 2 சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களுக்கும் (அதிகபட்சம்) வழிநடத்திய ஒரே கேப்டன்.
CSK அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியவர் மற்றும் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
கடைசிப் பந்து த்ரில்லர் வெற்றிகள், ஹெலிகாப்டர் ஷாட்கள் மற்றும் மின்னல் வேக ஸ்டம்பிங்குகள் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
களத்தில் வீரராக ஓய்வு பெற்றாலும், இனி டக்-அவுட்டில் இருந்து தனது கூர்மையான வியூகங்களால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தப் போகிறார் 'தல' தோனி!