பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ராஜினாமா
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான மோர்னே மோர்கல் திங்கட்கிழமை (நவம்பர் 13) தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு ராஜினாமனை உறுதி செய்துள்ளது. முன்னதாக, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் கடந்த ஜூன் 2023இல் ஆறு மாத ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் அணியுடன் சேர்ந்த நிலையில், ஒருநாள் உலகக்கோப்பையில் பெற்ற படுதோல்வியால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு மாற்றாக புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் டிசம்பர் 14 அன்று தொடங்குகிறது.