Page Loader
ஐபிஎல் 2024: ஒரு வழியாக, முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி
29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது

ஐபிஎல் 2024: ஒரு வழியாக, முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி

எழுதியவர் Venkatalakshmi V
Apr 08, 2024
09:23 am

செய்தி முன்னோட்டம்

நடப்பாண்டின் ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்ததுள்ளது. நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் உடன் நடைபெற்ற லீக் போட்டியில், 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த சீசனில் தொடர்ச்சியாக 3 தோல்விகளைப் சந்தித்த பிறகு தனது முதல் வெற்றியை மும்பை அணி பெற்றுள்ளது. தனது சொந்த மைதானத்தில் இந்த வெற்றியை பெற்றுள்ளது மும்பை அணி என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. அணியின் வெற்றிக்கு ரோஹித் ஷர்மாவும், இஷான் கிஷனும் அடித்தளம் இட்டனர். டெல்லி அணி, 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

embed

MI அணியின் முதல் வெற்றி!

#IPLClicks | "இதுதான் எங்கள் பண்பு" -MI கேப்டன் ஹர்திக் பாண்ட்யா #SunNews | #MIvsDC | #HardikPandya pic.twitter.com/gVSDsevH8G— Sun News (@sunnewstamil) April 8, 2024