ஐபிஎல்லில் முதல் விக்கெட்: நிரூபித்த அர்ஜுன் டெண்டுல்கர்! ப்ரீத்தி ஜிந்தா பாராட்டு!
செய்தி முன்னோட்டம்
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர், செவ்வாய்கிழமை (ஏப்ரல் 18) ஐபிஎல்லில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 16) கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் களமிறங்கினாலும், விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.
இந்நிலையில் ஐபிஎல் 2023 இன் 25வது போட்டியின் போது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் புவனேஷ்வர் குமாரை கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் 2 ரன்களில் வெளியேற்றினார்.
இது அர்ஜுனின் இரண்டாவது போட்டியாகும். மேலும் அவர் தனது முதல் விக்கெட்டை எடுத்து அதை மறக்கமுடியாததாக ஆக்கினார்.
preeti zinta praises arjun tendulkar
ப்ரீத்தி ஜிந்தா அர்ஜுன் டெண்டுல்கருக்கு பாராட்டு
அர்ஜுன் தனது முதல் இரண்டு ஓவர்களில் 14 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்காத நிலையிலும், மிகவும் முக்கியமான போட்டியின் இறுதி ஓவரை வீசும் பொறுப்பை ரோஹித் ஷர்மா அவரிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில், ஓவரின் இரண்டாவது பந்தில் அப்துல் சமத் ரன் அவுட் ஆனார்.
மேலும் கடைசியாக ஐந்தாவது பந்தில் புவனேஷ்வர் குமாரை அவுட்டாக்கி 14ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தார்.
அர்ஜுன் விக்கெட் எடுத்ததற்கு அவரது தந்தை சச்சின் மற்றும் சகோதரி சாராவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரும் பாலிவுட் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா, தன்னை பலரும் கேலி செய்ததை எல்லாம் கடந்து அர்ஜுன் தன்னை நிரூபித்துள்ளதாக பாராட்டி ட்வீட் வெளியிட்டுள்ளார்.