Page Loader
மெஸ்ஸி விளையாடமாட்டார்? ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா அணிக்கு பின்னடைவு
ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா அணிக்கு பின்னடைவு

மெஸ்ஸி விளையாடமாட்டார்? ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா அணிக்கு பின்னடைவு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 12, 2023
03:49 pm

செய்தி முன்னோட்டம்

லியோனல் மெஸ்ஸி கடந்த சில வாரங்களாக காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலகியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) தொடங்கும் கால்பந்து உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. அவர் விளையாடாமல் போனால், அது அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். முன்னதாக, ஜூலை மாதம் மெஸ்ஸி இன்டர் மியாமியில் சேர்ந்த பிறகு, 3-4 நாள் இடைவெளியில் ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ந்து விளையாடினார். இதைத் தொடர்ந்து அர்ஜென்டினா அறிக்கையாக உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஈக்வடார் அணிக்கு எதிராக விளையாடியபோது காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் நாட்டுக்காக எந்த போட்டியிலும் விளையாடவில்லை.

Lionel Messi doubtful for world cup qualifier match

இன்டர் மியாமி அணிக்காக மீண்டும் போட்டியில் பங்கேற்ற லியோனல் மெஸ்ஸி

தொடர்ந்து ஓய்வில் இருந்த மெஸ்ஸி இம்மாதம் அடுத்த இரண்டு போட்டிகளுக்கான லா இண்டர் மியாமி அணியிலும் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அர்ஜென்டினாவுக்கான இந்த மாதத்தின் முதல் உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டம் அக்டோபர் 13ஆம் தேதி பராகுவேக்கு எதிராக நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பது குறித்து மெஸ்ஸியின் நிலை தெரியாத நிலையில், அர்ஜென்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி, நிச்சயமாக மெஸ்ஸி முழு நேரமாக விளையாட விரும்புகிறார் என்று தெரிவித்துளளார். மேலும் லியோனல் ஸ்கலோனி, இந்த மாதம் நடக்கும் 2 போட்டிகளுக்கான அணியில் லியோனல் மெஸ்ஸியை சேர்த்துள்ளார். எனினும், அவரது பங்கேற்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், கடைசி நேரத்தில் சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது.