Loading...
'ரோஹித் மற்றும் விராட் கோலியை எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளேன்': நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன்
ரோஹித், கோலியுடன் மோத ஆவலுடன் இருப்பதாகக் கைல் ஜேமிசன் தெரிவித்துள்ளார்.

'ரோஹித் மற்றும் விராட் கோலியை எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளேன்': நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன்

எழுதியவர் Vasuki
Oct 28, 2026
05:14 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியை தனது சொந்த மண்ணில் மீண்டும் எதிர்கொள்வதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தின் சவாலான ஆடுகளங்களில் நடைபெறவுள்ள இந்தத் தொடர், இந்திய அணிக்கு மட்டுமல்லாமல், உலகக் கோப்பை போட்டியை இலக்காகக் கொண்டுள்ள ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கும் மிக முக்கியமான களமாக அமையவுள்ளது.

மகிழ்ச்சி

ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் கிடைத்த பொன்னான வாய்ப்பு

நியூசிலாந்து மண்ணில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியை ரசிகர்கள் நேரில் காணக் கிடைக்கக்கூடிய கடைசி வாய்ப்பாக இது இருக்கலாம் என்று கைல் ஜேமிசன் கூறியுள்ளார்.

அவர்களுடன் ஒரே மைதானத்தில் களம் காண்பது எதிரணி வீரர்களுக்கு எப்போதுமே ஒரு தனித்துவமான அனுபவம் எனக் குறிப்பிட்ட அவர், இந்த முறையும் அதில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை என்றும், சொந்த மண்ணில் மீண்டும் அவர்களுடன் நேருக்கு நேர் நின்று விளையாடுவது தங்களுக்கு மிகவும் அலாதியானதாக இருக்கும் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அபார திறன்

கோலியின் 100 சதங்கள் இலக்கு

சர்வதேச அளவில் 86 சதங்கள் அடித்துள்ள கோலியின் 100 சதங்கள் இலக்கு குறித்துப் பேசிய ஜேமிசன், "இந்தத் தொடரிலேயே அவர் அந்த மைல்கல்லை எட்டிவிடப் போவதில்லை என்பதால் இப்போதைக்கு நாங்கள் கவலைப்படவில்லை".

"ஆனால் அவரது அபாரத் திறமை மற்றும் உடற்தகுதியைப் பார்த்தால் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து விளையாட முடியும். உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் திறமையை எளிதில் இழக்க மாட்டார்கள்"

"இந்தியாவுக்காகவோ ஆர்சிபிக்காகவோ அவர் களம் காணும் வரை எந்த பந்துவீச்சாளருக்கும் மிகப்பெரிய சவால்தான்" என்று ஜேமிசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

ADVERTISEMENT