டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த இலங்கை வீரர் குஷால் மெண்டிஸ்
செய்தி முன்னோட்டம்
அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குசல் மெண்டிஸ் தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
முன்னதாக அயர்லாந்து முதல் இன்னிங்சில் 492 ரன்கள் குவித்து வலுவான அடித்தளத்தை அமைத்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான நிஷான் மதுஷ்கா (205 ரன்கள்) மற்றும் திமுத் கருணாரத்னே (115 ரன்கள்) அபாரமாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்தனர்.
இந்நிலையில், மூன்றாவது இடத்தில் களமிறங்கிய குஷால் மெண்டிஸ் (245 ரன்கள்) மதுஷ்காவுடன் சேர்ந்து மற்றொரு இரட்டை சதத்தை விளாசினார்.
இதற்கிடையே நான்காவது இடத்தில் களமிறங்கிய மேத்தியூசும் சதமடித்த நிலையில், 704/3 ரன்களுக்கு இலங்கை டிக்ளேர் செய்தது.
kushal mendis test performance
டெஸ்ட் கிரிக்கெட்டில் குஷால் மெண்டிஸ் புள்ளி விபரங்கள்
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான குஷால் மெண்டிஸ் தற்போது 58வது டெஸ்டில் விளையாடி வரும் நிலையில், 3,900 ரன்களை எடுத்துள்ளார்.
இந்த போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த மெண்டிஸ், மொத்தம் ஒன்பது டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார்.
இதில் அயர்லாந்துக்கு எதிராக மட்டும் அவர் இரண்டு அரைசதங்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஆண்டில் மெண்டிஸ் தற்போது வரை 4 போட்டிகளில் விளையாடி 500 ரன்களுக்கு அருகில் நெருங்கியுள்ளார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் மூன்று அரைசதங்கள் அடங்கும்.