Loading...
சென்னையில் 'தல' தோனிக்கு பிரத்யேக கௌரவம்: ஐடிசி கிராண்ட் சோழாவில் திறக்கப்பட்ட 'Room No. 7'
சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தோனிக்கான பிரத்யேக அறை திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 'தல' தோனிக்கு பிரத்யேக கௌரவம்: ஐடிசி கிராண்ட் சோழாவில் திறக்கப்பட்ட 'Room No. 7'

எழுதியவர் Vasuki
Nov 25, 2026
12:23 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனியின் சாதனைகள் மற்றும் பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் வகையில், சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் 'எம்.எஸ். தோனி டிரிபியூட் ரூம்' திறக்கப்பட்டுள்ளது. தோனியின் ஐகானிக் ஜெர்சி எண்ணான 7-ஐக் குறிக்கும் வகையில் 'ரூம் நம்பர் 7' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அறையில், அவர் கையொப்பமிட்ட இந்திய அணி மற்றும் சிஎஸ்கே ஜெர்சிகள், கிளவுஸ், ஸ்டம்புகள் மற்றும் நினைவுக் கோப்பைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 2011 உலகக்கோப்பை வெற்றி உட்படத் தோனியின் மறக்க முடியாத தருணங்களைச் சித்தரிக்கும் ஓவியங்களும், ராஞ்சி முதல் உலக கிரிக்கெட்டின் உச்சம் வரையிலான அவரது பயணத்தைக் காட்டும் ஒலி-ஒளி காட்சிகளும் இங்கு இடம்பெற்றுள்ளன.

சிறப்பம்சங்கள்

தோனியின் விருப்பமான உணவுகளுடன் ஆடம்பர தங்கும் வசதி

இந்த அறையில் தங்கும் விருந்தினர்களுக்கு தோனியின் விருப்பமான உணவு வகைகளை கொண்ட 'தி கேப்டன்ஸ் பேன்ட்ரி' என்ற பிரத்யேக உணவு அனுபவம் ஐடிசி தலைமை சமையல் கலைஞர்களால் வழங்கப்படுகிறது.

மேலும், அறையில் உள்ள உடைகள், துண்டுகள் மற்றும் தலையணைகள் அனைத்திலும் 'நம்பர் 7' சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதுடன், இளம் ரசிகர்களுக்காகத் தலைமைப் பண்பு மற்றும் குழு உணர்வை வளர்க்கும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

கிளப் ஐடிசி உறுப்பினர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக வழங்கப்படும் இந்த ஆடம்பர தங்கும் வசதி, தல ரசிகர்களுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Embed

ADVERTISEMENT