LOADING...
ஜடேஜாவின் சுழலில் சிக்கிய சிஎஸ்கே! 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி!
சிஎஸ்கே விக்கெட்டை கொண்டாடிய ஜடேஜா

ஜடேஜாவின் சுழலில் சிக்கிய சிஎஸ்கே! 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி!

எழுதியவர் Vasuki Ravichandran
Mar 30, 2026
10:49 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026 தொடரில் இன்று நடைபெற்ற தனது முதல் லீக் ஆட்டத்திலேயே சிஎஸ்கே அணி ஆல் அவுட் ஆகி அதிர்ச்சியளித்துள்ளது. கௌஹாட்டி மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், டாஸ்வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வுசெய்தது. 3-வது லீக் போட்டியில், சிஎஸ்கே அணி தனது முன்னாள் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சில் சிக்கி 127 ரன்களுக்குச் சுருண்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 128 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்துள்ள சிஎஸ்கே, தனது முதல் போட்டியிலேயே பேட்டிங்கில் கடும் பின்னடைவைசசந்தித்துள்ளது. பல ஆண்டுகளாகச் சென்னையின் செல்லப் பிள்ளையாக இருந்த ரவீந்திர ஜடேஜா, இன்று ராஜஸ்தான் ஜெர்சியில் சிஎஸ்கே-வின் வெற்றியைத் தடுத்து நிறுத்தியது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஜடேஜாவின் ஓவர்:

ஒரே ஓவரில் 2 விக்கெட்:

சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகக் களம் இறங்கிய ஜடேஜா, சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்தார். ஆட்டத்தின் 8-வது ஓவரை வீசிய ஜடேஜா, 2-வது பந்திலேயே சர்பராஸ் கானை (17 ரன்கள்) எல்பிடபிள்யூ (LBW) முறையில் வெளியேற்றினார். அதே ஓவரின் 3-வது பந்தில் சிவம் துபே 75 மீட்டர் சிக்ஸர் அடித்து ஜடேஜாவிற்கு நெருக்கடி கொடுத்தார். ஆனால், சற்றும் பதறாத ஜடேஜா, அந்த ஓவரின் கடைசி பந்திலேயே துபேவை ரவி பிஷ்னோயிடம் கேட்ச் கொடுக்க வைத்துப் பழி தீர்த்தார். விக்கெட்டுகளை வீழ்த்தியப் பிறகு ஜடேஜா காட்டிய அதீத உற்சாகமும் கொண்டாட்டமும், 2023 ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த வீரர், எதிரணிக்கு சென்றதும் விக்கெட்டைக் கொண்டாடியது ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிஎஸ்கே பேட்டிங் வரிசை சரிவு:

ராஜஸ்தான் அணிக்கு எளிய இலக்கு:

தோனி இல்லாத நிலையில் களம் கண்ட சென்னை அணியின் பேட்டிங் வரிசை, ஒரு சீட்டுக்கட்டுப் போலச் சரிந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வெறும் 6 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினார். விக்கெட் கீப்பராகக் களம் இறங்கிய சஞ்சு சாம்சனும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 3 ஓவர்கள் வீசி வெறும் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Advertisement