
ஐபிஎல் 2025: பிளேஆஃப் தகுதி வாய்ப்புகள் - எந்த அணிக்கு அதிக வாய்ப்பு? CSK நிலை என்ன?
செய்தி முன்னோட்டம்
2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) லீக் கட்டத்தில் இன்னும் 22 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் இறுதிப் போட்டியை நோக்கி தொடர் செல்கிறது.
தற்போதைய நிலவரப்படி, ஆறு அணிகள் 10 போட்டிகளில் விளையாடியுள்ளன, நான்கு அணிகள் தலா ஒன்பது போட்டிகளில் விளையாடியுள்ளன.
இந்த கட்டத்தில் எந்த அணியும் கணித ரீதியாக நிராகரிக்கப்படவில்லை. குறிப்பாக CSK அணி இன்று பஞ்சாப் அணியை எதிர்கொள்ளும் நேரத்தில், சிஎஸ்கே பிளே- ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறும் வாய்ப்பு இன்னும் உள்ளது என ஒரு சாரார் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இந்த நேரத்தில் ஒவ்வொரு அணியும் இன்னும் எவ்வாறு தகுதி பெற முடியும், அவர்களுக்கு எவ்வளவு சதவீத வாய்ப்பு உள்ளது என்பதை பார்க்கலாம்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
ஐபிஎல் 2025 - புள்ளிப்பட்டியல்https://t.co/CnV8a4haau | #IPL2025 | #IPL | #PointsTable | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/edOLPAgxpM
— News7 Tamil (@news7tamil) April 30, 2025
தகுதி வாய்ப்பு #1
ஒவ்வொரு அணிக்கும் எவ்வளவு % வாய்ப்பு உள்ளது? #1
புள்ளி பட்டியலில் முதலில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(91%)- RCB அணி 14 புள்ளிகளைக் கொண்ட ஒரே அணி. நான்கு போட்டிகள் மீதமுள்ள நிலையில், ஒரு வெற்றி பெற்றாலே பிளேஆஃப்களில் தங்கள் இடத்தைப் பிடிக்க முடியும். அதே நேரத்தில் இரண்டு வெற்றிகள் இருந்தால் முதல் 2 இடங்களை உறுதி செய்ய முடியும்.
12 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ்(69%)- MI அணி, தகுதி பெற மீதமுள்ள நான்கு போட்டிகளில் குறைந்தது இரண்டு வெற்றிகள் தேவை.
மூன்றாவது இடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ்(80%)- GT, ஐந்து போட்டிகள் மீதமுள்ள நிலையில், இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் போதும், RCB அணிக்கு நிகராக அவர்கள் புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பெறலாம்.
தகுதி வாய்ப்பு #2
ஒவ்வொரு அணிக்கும் எவ்வளவு % வாய்ப்பு உள்ளது? #2
டெல்லி கேபிடல்ஸ் (61%)-எட்டு போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய DC அணி, மூன்று நாட்களில் இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது. இருப்பினும், இன்னும் நான்கு போட்டிகள் மீதமுள்ள நிலையில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளேஆஃப்களுக்கு முன்னேறும்.
பஞ்சாப் கிங்ஸ் (63%)- PBKS ஒரு தனித்துவமான நிலையில் உள்ளது. இந்த அணி இரண்டு வெற்றிகளுடன் பிளேஆஃப்களில் இடம்பெற முடியும், அதே நேரத்தில் மூன்று வெற்றிகள் தகுதி பெற போதுமானதாக இருக்கும்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (22%)- LSG எட்டு போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன் வலுவான தொடக்கத்தை தந்தது. எனினும் கடந்த இரண்டு ஆட்டங்களில் ஏற்பட்ட தோல்விகள் அவர்களுக்கு பின்னடைவை தந்துள்ளது. இந்த அணி தகுதி பெற குறைந்தது மூன்று வெற்றிகள் தேவை.
தகுதி வாய்ப்பு #3
ஒவ்வொரு அணிக்கும் எவ்வளவு % வாய்ப்பு உள்ளது? #3
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (12%): எதிர்வரவுள்ள மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் இந்த அணி வெற்றி பெற்றால் மட்டும் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2%) - கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்த SRH அணியும் மீதமுள்ள ஐந்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் (0.2%) - RR அணி, நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் பிளே-ஆஃப் சுற்றிற்கு முன்னேறுவது சற்று கடினம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (0.04) - CSK அணியின் நிலைமையும் கவலைக்கிடம் தான். மீதமுள்ள ஐந்து ஆட்டங்களிலும் அவர்கள் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அப்போது தேவையான புள்ளிகளை அவர்கள் எட்ட முடியுமா என்பது சந்தேகமே!
CSK நிலைமை
CSK அணியின் பிளேஆஃப் வாய்ப்பு மிகவும் குறைவு
சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது 4 புள்ளிகளுடன் அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ளது. மீதமுள்ள ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகள் பெறும் புள்ளிகளைப் பொருத்து பிளேஆஃபுக்கு தகுதி பெற வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது.
இன்று சேப்பாக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது CSK.
இன்றும் தோல்வியடைந்தால் பிளேஆஃப் வாய்ப்பு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வரும்.
CSK-வின் தொடர் தோல்விகளில் அணித் தேர்வு, கேப்டன்சி, மற்றும் பேட்டிங் வரிசையின் தளர்வு முக்கியக் காரணங்களாக கூறப்படுகின்றன.
இதுவரை 21 வீரர்களை பரிசோதித்துள்ள CSK, மாத்ரே, பிரேவிஸ், ஷேக் ரஷீத் போன்ற இளம் வீரர்களிடம் மீதமுள்ள ஆட்டங்களில் நம்பிக்கை வைக்க வாய்ப்பு உள்ளது.