LOADING...
INDvsENG : ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக மிகக்குறைந்த ஸ்கோரை பதிவு செய்த இங்கிலாந்து
ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக மிகக்குறைந்த ஸ்கோரை பதிவு செய்த இங்கிலாந்து

INDvsENG : ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக மிகக்குறைந்த ஸ்கோரை பதிவு செய்த இங்கிலாந்து

எழுதியவர் Sekar Chinnappan
Oct 29, 2023
10:22 pm

செய்தி முன்னோட்டம்

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) லக்னோவில் உள்ள ஏகனா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தின் போது இங்கிலாந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஒருநாள் உலகக்கோப்பையில் தனது குறைந்த ஸ்கோரை பதிவு செய்துள்ளது. முன்னதாக, 230 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து, முகமது ஷமி (4/22) மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ராவின் (3/32) அபார பந்துவீச்சு 129 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2003க்கு பிறகு ஒருநாள் உலகக்கோப்பையில் முதல்முறையாக இங்கிலாந்தை வீழ்த்தியது. முன்னதாக, 2003 உலகக் கோப்பையில் 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு எதிராக தோல்வியடைந்த இங்கிலாந்து அதில் 168 ரன்கள் எடுத்திருந்ததே முந்தைய குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

England record lowest total against India in CWC

ஒருநாள் உலகக்கோப்பை 2023இல் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மோசமான செயல்திறன்

2019 ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி நடப்பு சாம்பியனாக இந்த உலகக்கோப்பையில் களமிறங்கியது. மேலும், இந்த முறை கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இங்கிலாந்து இருக்கும் என கிரிக்கெட் நிபுணர்கள் கூறி வந்தனர். ஆனால், அந்த கணிப்பை எல்லாம் பொய்யாக்கிய இங்கிலாந்து இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அதில் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள ஐந்து போட்டிகளிலும் மிகப்பெரிய வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து பரிதாபகரமாக உள்ள இங்கிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.