இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ODI : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) கியூபெர்ஹாவில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- இந்தியா : கேஎல் ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், குல்தீப் யாதவ், முகேஷ் குமார். தென்னாப்பிரிக்கா : டோனி டி ஸோர்ஸி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடென் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வியான் முல்டர், கேசவ் மஹாராஜ், நண்ட்ரே பர்கர், லிசாட் வில்லியம்ஸ், பியூரன் ஹென்ட்ரிக்ஸ்.