Page Loader
இங்கிலாந்துக்கு எதிரான யு-19 ஒருநாள் போட்டியில் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்தார் வைபவ் சூர்யவன்ஷி
யு-19 ஒருநாள் போட்டியில் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்தார் வைபவ் சூர்யவன்ஷி

இங்கிலாந்துக்கு எதிரான யு-19 ஒருநாள் போட்டியில் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்தார் வைபவ் சூர்யவன்ஷி

எழுதியவர் Sekar Chinnappan
Jul 03, 2025
04:25 pm

செய்தி முன்னோட்டம்

புதன்கிழமை (ஜூலை 2) நார்தாம்ப்டனில் உள்ள கவுண்டி மைதானத்தில் இந்தியா யு-19 மற்றும் இங்கிலாந்து யு-19 அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐபிஎல் மூலம் பிரபலமடைந்த இந்தியாவின் பேட்டிங் இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் சாதனை புத்தகங்களில் தனது பெயரைப் பொறித்துள்ளார். 287 என்ற கடினமான இலக்கைத் துரத்திச் சென்ற இந்திய கிரிக்கெட் அணியின் 14 வயது தொடக்க வீரர் வெறும் 31 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து தனது அசாதாரண திறமையை வெளிப்படுத்தினார். இதில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒன்பது சிக்சர்களும் அடங்கும். சூரியவன்ஷியின் அபாரமான ஆட்டம், 277.41 ஸ்ட்ரைக்-ரேட்டுடன், இப்போது யு-19 ஒருநாள் வரலாற்றில் வேகமான 80+ ஸ்கோராகும்.

சாதனை

சாதனை முறியடிப்பு

இதன் மூலம் சுரேஷ் ரெய்னாவின் முந்தைய சாதனையை முறியடித்தார். குறிப்பிடத்தக்க வகையில், அவர் இளைஞர் ஒருநாள் இன்னிங்ஸில் 250 ஸ்ட்ரைக்-ரேட்டுடன் 80+ ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் ஆவார். அவரது சாதனை, யு-19 ஒருநாள் வரலாற்றில் நான்காவது வேகமான 50+ ரன்களை எடுத்த வீரராகவும், 2016 யு-19 உலகக்கோப்பையில் ரிஷப் பண்டின் 18 பந்துகளில் அரைசதத்திற்குப் பிறகு இரண்டாவது வேகமான அரைசதம் அடித்த இந்திய வீரராகவும் திகழ்கிறார். குறிப்பாக, சூரியவன்ஷியின் ஒன்பது சிக்ஸர்கள், ஒரு இன்னிங்ஸில் ஒரு இந்திய யு-19 வீரர் அடித்த அதிகபட்ச சிக்சர்களாகும், இது மன்தீப் சிங்கின் 2009 சாதனையை முறியடித்தது. மேலும் இங்கிலாந்து மண்ணில் யு-19 ஒருநாள் போட்டியில் இதைச் செய்த முதல் வீரர் ஆவார்.