பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 இன்று: இறுதி போட்டிக்கு தகுதி பெறுமா ஹாக்கி அணி
பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று ஆகஸ்ட் 6 , இந்தியா, புதிய நம்பிக்கையுடன் இரு போட்டிகளை எதிர்நோக்கியுள்ளது. இந்திய ஆடவர் ஹாக்கி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் நோக்கில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது. பிரபல மல்யுத்த வீரர் வினேஷ் போகட்டும் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஈட்டி எறிதல் போட்டியில் அதிக கவனம் பெறும் மற்றொரு போட்டியாளர் நீரஜ் சோப்ரா. சென்ற ஆண்டு ஒலிம்பிக்கில் ஈட்டி எரிதலில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்த நீரஜ் சோப்ரா, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது முதல் உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு மற்றும் டயமண்ட் லீக் இறுதிப் போட்டிகளில் சாம்பியனாக உருவெடுத்தார்.
இன்றைய போட்டிகளின் அட்டவணை
செவ்வாயன்று நண்பகல் 15:20 IST மணிக்கு தகுதி குழு B இல் நீரஜ் சோப்ரா மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியை தொடங்குவார். அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்,13:50 IST க்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கிஷோர் குமார் ஜெனா, ஆடவர் ஈட்டி எறிதல் தகுதி குரூப் A இல் பங்கேற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவார் என்று நம்புகிறார். காலை, ஹர்மீத் தேசாய், மானவ் தக்கர் மற்றும் அச்சந்தா ஷரத் கமல் ஆகியோர் கொண்ட அணி, ஆண்கள் டேபிள் டென்னிஸ் காலிறுதி போட்டியுடன் நாள் தொடங்கும். இன்று இரவு 10.30.மணிக்கு அரையிறுதிக்கு தகுதி பெறும் போட்டியில் இந்தியா ஆண்கள் ஹாக்கி அணி, ஜெர்மனி அணியுடன் மோதவுள்ளது.