Page Loader
ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை 2025: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரே குழுவில் இடம்
2025 ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரே குழுவில் இடம்

ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை 2025: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரே குழுவில் இடம்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 28, 2025
08:33 pm

செய்தி முன்னோட்டம்

வரவிருக்கும் ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2025 க்கான பி பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும் இந்தப் போட்டி, 24 அணிகளைக் கொண்ட விரிவாக்கப்பட்ட பட்டியலுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் போட்டியாக இருக்கும். அதிகாரப்பூர்வ குழு அறிவிப்பு நிகழ்வு சனிக்கிழமை (ஜூன் 28) அன்று சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் அறிவிக்கப்பட்டதன்படி, பி பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் சிலி மற்றும் சுவிட்சர்லாந்துடன் மோதும். சொந்த நாட்டில் போட்டி நடக்க உள்ளதால் இந்திய ஹாக்கி அணி, 2016 க்கு பிறகு மீண்டும் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது.

அணிகள்

அணிகளின் பட்டியல்

ஏ குழுவில் ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. பி குழுவில் மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்தியா, பாகிஸ்தான், சிலி மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் உள்ளன. சி குழுவில் அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் சீனா ஆகியவை உள்ள நிலையில், ஸ்பெயின், பெல்ஜியம், எகிப்து மற்றும் நமீபியா ஆகியவை குழு டியில் இடம்பிடித்துள்ளது. நடப்பு சாம்பியனான நெதர்லாந்து, குழு இ'யில் மலேசியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரியாவுடன் இடம்பெற்றுள்ளது. குழு எபஃப்பில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென்கொரியா மற்றும் பங்களாதேஷ் ஆகியவை உள்ளன. இதற்கிடையே, அதிகாரப்பூர்வ குழு அறிவிப்பு நிகழ்வில் இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் போலா நாத் சிங் மற்றும் இயக்குநர் ஜெனரல் ஆர்.கே. ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post