Loading...
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் முதலாவது ஒருநாள் போட்டி: 15,000 ரன்கள் மைல்கல்லை எட்ட விராட் கோலிக்கு அரிய வாய்ப்பு
இரு மாத இடைவெளிக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி களத்திற்குத் திரும்புகிறார்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் முதலாவது ஒருநாள் போட்டி: 15,000 ரன்கள் மைல்கல்லை எட்ட விராட் கோலிக்கு அரிய வாய்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 27, 2026
11:11 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஒருநாள் போட்டி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இரு மாத இடைவெளிக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களத்திற்குத் திரும்புகின்றனர்.

வரலாற்று மைல்கல்

விராட் கோலி எதிர்நோக்கும் வரலாற்று மைல்கல்

தற்போது வரை 314 ஒருநாள் போட்டிகளில் (302 இன்னிங்ஸ்கள்) விளையாடியுள்ள கோலி, 14,941 ரன்களைக் குவித்துள்ளார்.

18,426 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் இப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார்.

இந்த தொடரின் மூலம் கோலி சச்சின் சாதனையை நெருங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த முன்னணி வீரர்கள்:

1. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா): 463 போட்டிகள் - 18,426 ரன்கள்

2. விராட் கோலி (இந்தியா): 314 போட்டிகள் - 14,941 ரன்கள்

3. குமார் சங்ககாரா (இலங்கை): 404 போட்டிகள் - 14,234 ரன்கள்

4. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா): 375 போட்டிகள் - 13,704 ரன்கள்

5. சனத் ஜெயசூர்யா (இலங்கை): 445 போட்டிகள் - 13,430 ரன்கள்

கூடுதல் சாதனைகள்

சொந்த மண்ணிலும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகவும் கூடுதல் சாதனைகள்

அனைத்து சர்வதேசப் போட்டி வடிவங்களிலும் சேர்த்து மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கோலி 3,850 ரன்கள் (73 போட்டிகள்) எடுத்துள்ளார்.

இன்றைய ஆட்டத்தில் 150 ரன்கள் விளாசினால், ஜாக் காலிஸுக்கு அடுத்தபடியாக அவ்வணிக்கு எதிராக சர்வதேச அளவில் 4,000 ரன்களை கடக்கும் 2-வது வீரராவார்.

இந்தியாவில் 130 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,867 ரன்கள் எடுத்துள்ள கோலி, இன்றைய ஆட்டத்தில் 110 ரன்கள் எடுத்தால் இந்தியாவில் அதிக ஒருநாள் ரன்கள் குவித்த சச்சினின் சாதனையை (164 போட்டிகளில் 6,976 ரன்கள்) முறியடிப்பார்.

மேலும், 133 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சொந்த மண்ணில் 7,000 ஒருநாள் ரன்களை கடந்த உலகின் முதல் வீரர் என்ற தனித்துவ சாதனையும் படைப்பார்.

ADVERTISEMENT