LOADING...
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் டாப் 10 இடங்களுக்குள் மீண்டும் நுழைந்தார் ரோஹித் ஷர்மா
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் டாப் 10 இடங்களுக்குள் மீண்டும் நுழைந்தார் ரோஹித் ஷர்மா

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் டாப் 10 இடங்களுக்குள் மீண்டும் நுழைந்தார் ரோஹித் ஷர்மா

எழுதியவர் Sekar Chinnappan
Jul 19, 2023
05:22 pm

செய்தி முன்னோட்டம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் சதமடித்த ரோஹித் ஷர்மா, ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார். முன்னதாக, 13வது இடத்தில் இருந்த ரோஹித், தற்போது மூன்று இடங்கள் முன்னேறி 10வது இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது முதல் ஆட்டத்தில் 171 ரன்கள் எடுத்ததன் மூலம் தரவரிசை பட்டியலில் முதல்முறையாக இடம் பிடித்துள்ளார். ஜெய்ஸ்வால் பேட்டிங் தரவரிசையில் 73வது இடத்தில் உள்ளார். ரோஹித் ஷர்மா 10வது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், ஏழு மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வரும் ரிஷப் பந்த் டாப் 10இல் இருந்து வெளியேறி 11வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். நட்சத்திர பேட்டர் விராட் கோலி 14வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்.

ashwin jadeja retains top spot in bowling and all rounder

முதலிடத்தை தக்கவைத்துள்ள அஸ்வின் ரவிச்சந்திரன், ரவீந்திர ஜடேஜா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அஸ்வின் ரவிச்சந்திரன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் என மொத்தம் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதன் மூலம் பந்துவீச்சு தரவரிசையில் 24 புள்ளிகளை அதிகரித்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார். தற்போது அவர் இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸை விட 56 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜாவும் பந்துவீச்சு தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தில் உள்ளார். இதற்கிடையே ஆல்ரவுண்டர் தரவரிசையில், ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் ரவிச்சந்திரன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.